கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

விண்ணை முட்டும் விலைவாசி உயர்விலும்  இந்த பாழாய் போன மக்கள் இலவசமாக கிடைக்கும் வண்ணத் தொலைகாட்சிக்ககவும் , இலவச வாயு அடுபுக்காகவும் அலைகிறார்களே தவிர நிரந்தர வருமானத்திற்கு இந்த அரசு ஏதாவது  செய்ததா என என்ன மறுக்கிறார்கள் கொல்லைகூட்டதலைவன் கொடுத்த இலவசங்களுக்காக அலையும் இந்த மக்கள் நாளை நம் சந்ததி எப்படி இந்த  தேசத்தில் வாழும் என்பதை மறந்து விடுகின்றனர். பாவம் ஏழை மக்கள் என்னசெய்வார்கள்  அவர்களுக்கு இன்றைய வயிறு நிறைந்தால் போதும் என்ற மனமே இருக்கிறது . ஏனெனில் தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே.நாளை தமிழகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் நான் இருக்கும் வரை இந்த தமிழக மக்கள் எனக்கு சோம்பு தூக்கிகளாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஊழல் பெருச்சாளியை தமிழக  முதல்வராய் தேர்ந்தெடுத்த இந்த மக்கள் இந்த முறை திருந்தவில்லையானால் தமிழகத்தை எந்த பெரிய பொருளாதார மேதையாலும் காப்பாற்ற முடியாது.என்னை கடலிலே தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம் என ஏன் அடிக்கடி  கலைஞர் தொலைகாட்சியில்  விளம்பரம்  ஏன் வருகிறது தெரியுமா உங்களுக்கு தெரியாதென்றால்  நான்  சொல்கிறேன்
அவர் செத்தாலும் கட்டுமரமாக மாறி அதில் பயணம் செய்யும் தமிழனை சிங்களவனிடம் கொண்டுசென்று  கொள்ளவேண்டும் என்பதை  தான் இப்படிதந்திரமாக சொல்கிறார். நான் முடிந்தளவு உலக வங்கியில் கடன் வாங்கி தமிழன்அத்தனை பேரையும் உலகவங்கிக்கு அடமானம்  வைத்து அதில் என் வாரிசுகளை வளமாய் வாழவைப்பேன் . விழா எடுப்பேன் . ஏன் இவ்வளவு செய்வேன் என்றால் உங்களில் ஒருவனுக்காவது என்னை எதிர்த்து கேள்வி கேட்க தைரியம் இருகிறதா ?அப்படி கேட்டால்  நான் சும்மா விட்டு விடுவேனா. ஆயிரத்தெட்டு  பொய் வழக்கு போட்டு உள்ள தள்ளி உன்ன ஒன்னும் இல்லாம பண்ணி விடுவேன் .நான் எதற்காக இந்த 87 வயதிலும் கஷ்ட படுகிறேன் தெரியுமா எல்லாம் என் நாட்டுகாக . எப்படியாவது இன்னும் 20  வருடங்களில் இந்த தமிழகத்தை என் தமிழகமாக , என் வாரிசுகளின் அடிமை நாடாக மாற்றத்தான் இவ்வளவு  நாளாக நான் கஷ்டபடுகிறேன் .அது உங்களுக்கு புரியாது  புரிந்திருந்தால் இந்த கலைஞரை எப்போதே தமிழகத்தை விட்டு விரட்டி இருப்பீர்கள் . இப்போது தான் தமிழகத்தை  பங்கிட்டு இருக்கிறேன் .வட தமிழகம் சின்னவனுக்கும் தென் தமிழகம் பெரியவனுக்கும் கலைத்துறை பேரன்களுக்கும் கொடுத்திருக்கிறான்  அவர்கள் சீக்கிரம் அனைவரையும் அடிமை படுத்தி விடுவார்கள் என்பதில் எனக்கு கொஞ்சமும் ஐயமில்லை .

குறிப்பு 
என் தமிழ் நாடு வாழ் மக்களே ஒரு வேலை சோத்துக்கும் ஒரு நூறு காசுக்கும் ஒரு மது பாட்டிலுக்கும்  உங்கள் ஓட்டுகளை தயை கூர்ந்து விற்காதீர்கள் நாளைய நம் நாடு நம் சந்ததி சந்தோசமாய் எந்த வித பிரச்னையும் இல்லாமலும் ,சட்டம் சரியாக செயல்படவும் , நீதியை நிலை நாட்டவும் , சரியான ஒரு தலைவனை தேர்ந்தெடுங்கள் . அது உங்களையும் உங்கள் சந்ததியையும் பல்லாண்டு நிம்மதியோடு வாழ வழி செய்யும்.

 
துப்பாக்கி பாஸ் துப்பாக்கி துரத்தி துரத்தி சுடும்
தோட்டா போட்ட துப்பாக்கி