கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

சாப்பிட சாப்பாடு இலவசம்,

உடுக்க ஆடை இலவசம்,

படுத்து உறங்க இடம் இலவசம் ,

தூங்கி எழுந்தவுடன் தேநீர் இலவசம்,

படம் பார்க்க டிக்கெட் இலவசம்,

பயணம் செய்ய பயணசீட்டு இலவசம்,

தேர்வுக்கு முன்னால் பதில் புத்தகம் இலவசம்,

படிக்கும் முன்னே பட்டம் இலவசம்,

படித்த பின்னே "வேலை இல்லாதவன் " என்ற பட்ட பெயர் இலவசம்,

பேசுவதற்கு செல்போன் இலவசம்,

பேச பேச டாக் டைம் இலவசம்,

பேசி முடித்தவுடன் இளநீர் இலவசம்,

கணவன் இல்லாதவர்க்கு கணவன் இலவசம்,

மனைவி இல்லாதவர்க்கு மனைவி இலவசம்,

குழந்தை இல்லாதவர்க்கு குழந்தை இலவசம்,

24 மணி நேரமும் டாஸ்மாக் ல் சரக்கு இலவசம்,

இப்படியாகத்தான் இருக்கும் 2016 ம் ஆண்டு தேர்தல் அறிக்கை

விழித்திடுங்கள் மக்களே விழித்திடுங்கள் இலவசங்கள் வேண்டாம் இலவச பொருட்களும் வேண்டாம் எல்லா பொருளும் வாங்குமளவுக்கு என் பொருளாதரத்தை உயர்த்த மட்டும் வழி செய்தால் நானே அனைத்தையும் வாங்கி கொள்வேன். அப்படி எண்ணுங்கள் இலவசத்தின் பின்னே அலையாதீர்கள்.


அதிமுக , திமுக இரண்டு கட்சிகள் தான் இந்த தமிழ் நாட்டை ஆள வேண்டுமா? வேறு ஒருவருக்கு ஒரு சந்தர்பம் தர கூடாதா? உங்கள் ஊரில் நல்லவர்களே இல்லையா? அவர்களை தேர்தலில் நிறுத்துங்கள் , அவர்களை ஜெயிக்க வையுங்கள் அவர்கள் மூலமாக உங்கள் ஊருக்கு தேவையான தேவைகளை நிறைவேற்றி கொள்ளுங்கள் அதை விடுத்து அதிமுக திமுக என மாறி மாறி ஓட்டு போடுவதால் தான் அவர்களின் குறிக்கோள் ஆட்சியை பிடிப்பதிலும் இலவசங்களை கொடுத்து மக்களை முட்டாளாக்குவதிலும் முனைப்புடன் செயல் படுகிறார்கள் .


மக்களின் வாழ்க்கைதரம் உயர்ந்து வாங்கும் சக்தி உயர்ந்தால் அவர்களாகவே அவர்களுக்கு தேவையானதை வாங்கி கொள்வார்கள். அப்போது அவர்களுக்கு இலவசம் தேவைபடாது. இவர்களால் ஆட்சியை பிடிக்க முடியாது கோடி கோடியாய் கொள்ளை அடிக்க முடியாது அதனால் தான் இலவசங்களை நமக்கு கொடுத்து இஷ்டத்துக்கு கொள்ளை அடிகிறார்கள்.

இலவசங்கள் என்ன அவங்க அப்பன் வீட்டு பணத்தில் இருந்த தருகிறார்கள் இல்லையே நாம் கொடுக்கும் வரி பணத்திலிருந்து தானே தருகிறார்கள் வரி பணம் மட்டும் அல்லாமல் கடன் வாங்கி அல்லவா இலவசங்களை தருகிறார்கள். அந்த கடன் யாருக்கு சொந்தம் ஆட்சி செய்தவர்களுக்கா? இல்லையே குடி மக்களாகிய நமக்குதானே? இலவசங்கள் நமக்கு பெருமை அல்ல . இலவசங்களால் நாம் கடனாளியாவது மட்டுமல்ல நமது சந்ததியையும் சேர்த்து கடன்காரர்களாக மற்றும் வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.


இலவசங்கள் கொடுக்க செலவு செய்யும் வரி பணத்தை வைத்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தலாமே? அதன் மூலம் வாழ்க்கைதரம் உயரும். வாழ்க்கைதரம் உயர்ந்தால் அதன் மூலம் வாங்கும் தரமும் உயரும். இன்று இலவசங்கள் என்ற பெயரில் கொடுக்கும் அனைத்தையும் நாம் உழைத்து வாங்கி கொள்ளலாமே? உங்களை சிந்திக்கவிடாமல் , உழைக்கவிடாமல் , உயரவிடாமல் சோம்பேறியாக்கும் முயற்சியே இலவசம்.

தமிழகம் என்றோர்

ஊருண்டு - அங்கே

தகிடுதத்தங்கள்

நிறைய உண்டு

அண்டி பிழைக்க

அரசியலுண்டு - மக்களை

ஆட்டி படைக்க

ஆட்சி உண்டு - ஆட்சியை

பிடிக்க பணம் உண்டு

பணத்தை எடுக்க

பதவி உண்டு

பதவியை வைத்து

பல கோடி கொள்ளை

அடிப்பதுண்டு....


சிந்தியுங்கள் வாக்காளர்களே சிந்தியுங்கள் .

2 comments:

Nice Post!
Welcome to Politics!
Try to clean it!
Are you ready to file a nomination as an Independant Candidate???
I'll vote for you!!

ya sure
Sai Gokula Krishna

THanks for visit and commented

Post a Comment