கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,


* பணம் பேசத் தொடங்கினால் உலகம் வாயை மூடிக்கொள்ளும் - எஸ்டோனியா.

*பணத்துக்கு சிறகுகள் உண்டு - பிரான்ஸ்

*பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் - இந்தியா.

* எந்த முட்டாளும் பணம் சம்பாதிக்கலாம்;
ஆனால் அறிவாளிதான் அதை காக்க முடியும் - அமெரிக்கா.

* பணம் உள்ளவனுக்கு அச்சம்;பணம் இல்லாதவனுக்கு வருத்தம் - ஜெர்மனி.

*பணம் அறிவாளர்களுக்குத் தொண்டு செய்யும், மூடர்களை ஆட்சி செய்யும் - பிரான்சு

பெண்ணே!
கண்ணுக்குள் உன்னை 
ஒளித்து வைத்து 
இமைகள் என்னும் 
கதவுகள்  அடைத்து 
காத்து வருகிறேன் 
கனவில் 
நீ களவு போவதற்காக..

.

பெண்ணே !
என் 
ஆழ்மன 
அழுக்குகள் 
எல்லாம் 
அடியோடு
அழிந்ததடி 
உன் அப்பழுக்கற்ற 
அழகு சிரிப்பை பார்த்து....