கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
அவருக்கு எங்கேயும்  உண்டு மதிப்பு
இப்படி அனைவரும் கற்க வேண்டிய கல்வி இன்று வணிக மயமாகி  விட்டது காலத்தின்  கொடுமை இல்லை நம்மை அரசாலும் அரசியல்  வாதிகளால்  செய்யப்படும் கொடுமை.

                        கல்வி மட்டுமே ஒரு நல்ல சமுதாயத்தை  உருவாக்கும் என்ன எண்ணி இலவச கல்வியும்  , பாமரனின் குழந்தையும் பசி இல்லாமல் படிக்க வேண்டும் என  இலவச மதிய உணவு திட்டத்தை உருவாக்கி  ஏழையின்  குழந்தையும் பள்ளிக்கு வந்து  கல்வி கற்க வழி ஏற்படுத்தினர் காமராஜர். 

                     ஆனால் இன்று கல்வி வியாபாரமாகி கிடக்கிறது.   ஆங்கில வழியில் படித்தால் மட்டுமே நல்ல வேலையும், நல்ல  மதிப்பையும் பெற முடியும் என்ற நிலைமையை ஏற்படுத்தி  விட்டனர் இன்றைய அரசியல் வாதிகள். அரசு பள்ளிகள் அனைத்தும் தமிழ் வழியில் போதிக்கின்றன . matriculation, CBSE மற்றும் அனைத்து தனியார் பள்ளிகளும் ஆங்கில வழியிலேயே படங்களை போதிக்கின்றன . தமிழ்,  தமிழ் என பேசும் இன்றைய அரசியல் வாதிகளால்  எத்தனை M.A தமிழ்  B.A தமிழ் படித்தவர்களுக்கு வேலை தர முடிகிறது. எத்தனை கல்லூரிகளில் தமிழ் என்ற பிரிவு இருக்கிறது. தமிழக அரசு தமிழில் போதிக்குமாம் ஆனால் ஆங்கிலம் தெரியவில்லை என்றால் அரசு வேலை இல்லையாம். என்ன அரசாங்கம் இது.

                   தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் நிறைய  இருகின்றன அதில் ஆரம்பபள்ளி , தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி , உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி  இப்படி விதவிதமான பள்ளிகள் தமிழ்நாட்டில்  தமிழக அரசு நடத்திக்கொண்டு இருக்க  matriculation  அப்படின்னு சொல்ல படுகிற ஆங்கில வழி பள்ளில தான் என் பிள்ளைய சேர்ப்பேன் என பெற்றோர்கள் ஏன் அடம் பிடிகிறார்கள்.. ஒரே காரணம்   கல்வியின் தரம் அவ்வுளவுதான். தரம் அப்படிங்குற  ஒரே காரணத்துக்காக தான் matriculation பள்ளியிலும்  CBSE  பள்ளியிலும் தம் பிள்ளையை சேர்க்க இந்த பெற்றோர்கள் தவியாய் தவிக்கிறார்கள்.

                    அரசு பள்ளியில் ஆங்கிலமே பேருக்குத்தான் சொல்லி தரபடுகிறது. ஆனால் Maticulation, CBSE  ஆங்கில வழியில் மட்டுமே  சொல்லி தரபடுகின்றன. அங்கே படிக்கும் குழந்தைகள்  தொடக்கத்திலிருந்தே ஆங்கிலத்தில் நன்றாக  பேசவும், படிக்கவும், எழுதவும், கற்றுகொள்கின்றனர் அந்த காரணத்தால் அவர்களால் +2 முடித்தவுடன் அனைத்து entrance  என்று சொல்லபடுகின்ற நுழைவுத் தேர்வுக்கு எளிதாக  ஆயத்தமாக முடிகிறது. அந்த காரணத்தால் அவர்கள் எளிதில் மேல் படிப்பு படிக்கவும் முடிகிறது எளிதில் வேலை தேடிக்கொள்ளவும் முடிகிறது . இந்த காரணங்களுக்காகத்தான் பெற்றோர் தனியார் பள்ளியில்   சேர்த்து விட துடியாய் துடிக்கிறார்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி தனியார் பள்ளிகளும் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணங்களை முடிவு செய்து கல்வி கொள்ளையில் ஈடுபடுகிர்ரர்கள். இது ஒரு புற மிருக்க சமீப காலமாக அரசு நடத்தி வரும் பள்ளிகளுக்கு மூடு  விழா நடத்த படுவதாக செய்திதாள்களில் பார்த்தேன் ஆனால் நாளொரு மேனியும் பொழுதொரு பள்ளியுமாக தனியார் பள்ளிகள் மட்டும் முளைத்துக் கொண்டே இருகின்றன..

                          ஏன் இப்படி என யோசித்தால் அரசு பள்ளிகளின் கல்வி தரம் இல்லை. தரமான கல்வி இருந்தாலும் அதை போதிக்க ஆசிரியர் இல்லை. அப்படியே ஆசிரியர் இருந்தாலும்  அந்த பாடத்தை புரிந்து நடத்த அவருக்கு தகுதி இல்லை இப்படிப்பட்ட காரணங்களால்  நடுத்தர வர்க்கத்தினர் தனது பிள்ளையின் எதிர் காலம் சிறப்பாக இருக்க தனியார் பள்ளிகளை  தேர்ந்தெடுகின்றனர். அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தினாலும் நடத்தா விட்டாலும் ஊதியம் தர அரசு இருக்கிறது. இடையில் சம்பாதிக்க டூஷன்  இருக்கிறது. நான் படித்த அரசு பள்ளி களிலும் சரி பக்கத்தில் இருந்த பள்ளிகளிலும் சரி ஆங்கிலத்தை ஆவலோடு கற்றுத்தர ஒரு ஆசிரியர் இல்லை. அவரே சொல்லுவர் ஆங்கிலம் கஷ்டம் master நோட்சோ அல்லது ஜெயக்குமார் நோட்சோ வாங்கி படித்து  பாசாகி  கொள்ளும் படி சொல்லுவர் அப்படி அவர்கள் ஆங்கிலத்தை கற்று தராத காரணத்தால்  ஆங்கிலம் என்றால் வேம்பாய் கசந்தது. ஆங்கில இலக்கணம் என்றால் அதை விட கசந்தது. இப்படி சொல்லி தரப்பட்ட  மாணவனால் எப்படி நுழைவுத்தேர்வை சந்திக்க முடியும். கடைசியில் +2  முடித்து விட்டு எதோ ஒரு வேலைக்கு தான் போக முடியும்  உயர் கல்வி எல்லாம் கற்க முடியாது ஏனெனில் அங்கேயும் ஆங்கிலம் தானே இருக்கும்.சிலர் விதி விலக்காக இவ்வளவு இன்னல் களையும் தாண்டி வென்று விடுவார்கள்  அவர்களில் பெயர்களை சொல்லியே இந்த ஆசிரியர்களும் காலத்தை ஓட்டி ஒய்வு பெற்று விடுவார்கள். அடுத்த ஆசிருயரும் இப்படியே தொடர்ந்ததால் தான் இன்று தனியார் கல்வி நிறுவனங்கள் பல்கி பெருகி விட்டன.

                    இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமெனில் இந்த அரசு தான் முயற்சிக்க வேண்டும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். அனைத்து பாடங்களும் கற்பிக்க தகுதியான   ஆசிரியரை பணியமர்த்த வேண்டும். பணி செய்யும் ஆசிரியரின் தகுதியை  இரண்டு அல்லது மூன்று ஆண்டு களுக்கு ஒரு முறை  சோதனை செய்ய வேண்டும். பணி தொய்வு இருப்பின் அதை களைய முயற்சி எடுக்க வேண்டும். தகுதியற்ற ஆசிரியர்களை தகுதியை உருவாக்கிக்கொள்ள வாய்பளிக்க  வேண்டும். அப்போதும் தகுதியை உருவாக்கி கொள்ள வில்லையெனில் அவரை வேறு துறைக்கு மாற்றி தகுதியானவரை பணியமர்த்த வேண்டும்.  அப்போது தான் கல்வி தரம் உயரும். நுழைவுதேர்வு  நடத்தியே உயர் கல்விக்கு தகுதியை உறுதி செய்ய சொல்லலாம் அப்போது கிராமத்து மாணவனும் நுழைவுத்தேர்வில்  எழுதி மேல் படிப்பை தொடருவான்  அதை விடுத்து  நுழைவுத்தேர்வை ரத்து செய்கிறேன், பத்தாம் கிளாஸ் தேர்வை ரத்து செய்கிறேன் என்று கல்வியின் தரத்தை குறைக்கும் வேலையை செய்யாதிருக்கவேண்டும். அப்போது இந்த கல்விக்கொள்ளை காணமல் போகும் அரசு பள்ளியின் கல்வித்தரத்தை உயர்த்த ஒரு அரசியல்வாதியும் முயற்சி செய்ய மாட்டார்கள்  ஏனெனில் அவர்கள் தானே தனியார் கல்வி நிறுவனங்களை நடத்தி கொண்டு இருக்கிறார்கள் அரசு பள்ளியின் கல்வி  தரத்தை உயர்த்தாமல்  தனியார் பள்ளியின் கல்வி கட்டணத்தை குறைக்க அரசு முயற்சி செய்வதும் நீதிபதி களை கொண்டு  கமிட்டி  அமைத்து கட்டணத்தை குறைக்க சொல்லுவதும் தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகத்தான்  இருக்கும். எந்த வித மாற்றமும் இருக்காது. இப்போது சொல்லுங்கள் இந்த கல்வி கொள்ளை நடக்க இந்த அரசு தான் காரணம் என நான் சொல்வதில் என்ன தவறு ?.
 
                                 அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை  உயர்த்தி  தேர்ந்த ஆசிரியர்களை  கொண்டு  கல்வி போதித்தால் தனியார் பள்ளிகளை தேடும் பெற்றோர் அரசு பள்ளிகளில் தமது குழந்தையை சேர்ப்பார்கள். அப்போது தனியார் பள்ளிகளின் சேர்க்கை விகிதம் குறையும் அப்போது தானாக கல்வி கட்டணத்தை தனியார் பள்ளிகளும் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகும் அதற்கு நீதிபதியும்  வேண்டாம் அரசும் வேண்டாம் எல்லாம் தன்னாலே சரியாகும் அரசு பள்ளி கல்வியின் தரம் உயரும் போது செய்யுமா இந்த அரசு ?????

கடமையை செய்
பலனை எதிர் பாராதே!
இது பழ மொழி...

நேற்று நமது கடமையை செய்ய வேண்டிய நாள் 
நேற்று எத்தனை பேர் தனது கடமையான வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்கும் கடமையை  செய்து  இருப்பார்கள். நேற்று பதிவான வாக்குகள்  தான்  தமிழக தேர்தல் வரலாற்றில் அதிகமாக பதிவான வாக்குகளாம். பெரும்பாலும் படித்தவர்கள் அரசியலை பற்றியும், ஊழலை பற்றியும் ஜனநாயகத்தை பற்றியும் வாய் கிழிய பேசுவார்கள். ஆனால் செயல் என்று வரும்போது நமக்கென்ன  நாம் போடும் ஒரு ஓட்டு தான் இந்த ஆட்சியை மற்ற போகிறதா?  அல்லது நம்  ஒரு ஓட்டு தான் நாம் நினைக்கிற ஆட்சியை தர போகிறதா? என எண்ணி வாக்களிக்க செல்லாமலே இருந்து விடுவார்கள்.

படித்தவர்கள் வாய் கிழிய பேசினாலும் வாக்கு சாவடிக்கு வந்து வாக்களிக்க மாட்டேன் என்கிறார்கள். என்னுடன் படித்த இன்று சென்னையில்  IT  கம்பெனிகளில் வேலை பார்த்து கொண்டிருக்கும் பலர் வாக்களிக்க வரவில்லை. ஆனால் தேசம் கொள்ளை போகிறது, எங்கும் ஊழல் எதிலும் ஊழல், எதற்கெடுத்தாலும்  லஞ்சம்  என குற்றம் சொல்லும் இவர்கள் தேர்தல் நாளை சந்தோசமாக கழிக்க சென்னையிலே தங்கி விட்டிருக்கிறார்கள். இவர்களால் அவரவர் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க முடியாதா என்ன? முடியும் ஆனால்  கடமையை செய்ய மறுக்கும் இவர்களுக்கு கிடைத்த காரணம் என் வாக்கு மட்டும் எதுவும் மாற்றாது.

ஆனால் எங்கள் ஊரில் இருந்து  பெங்களுருக்கு கூலி வேலை செய்ய சென்ற 40 கூலி தொழிலாளர்கள் தனது ஜனநாயக கடைமையாற்ற  மூன்று நாள் வேலையை விட்டு சம்பாதித்த  பணத்தை செலவு செய்து வாக்களிக்க  வந்து சென்ற அவர்களுக்கு  இருக்கும் வாக்களிக்க வேண்டும் வாக்களிப்பது நமது கடமை  என்ற  எண்ணம் கூட இல்லையே படித்த அறிவு ஜீவிகளுக்கு.  படிக்காமல் போனாலும் ஜனநாயக கடமையாற்ற வந்த  அவர்களின் மேல் மதிப்பும் மரியாதையும்  தானாகவே  வருகிறது.
படித்தவர்கள் வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக களம்  இறங்க வேண்டுமென்பதே என்னுடைய ஆவல்...