கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

முதுமைக்கு வேண்டியதை இளமையில் இருந்தே தேடுவது போல, மறுபிறவிக்கு வேண்டிய நன்மைகளை இப்பிறவியிலேயே தேடவேண்டும்.


· போதும் என்ற திருப்தி உனக்கு என்று உண்டாகிறதோ அன்று இன்ப மாளிகையின் முற்றத்தை நீ அடைந்து விட்டதாக உணரலாம்.


· என் வயலுக்கு மட்டும் மழை பொழிய வேண்டும் என்று எண்ணாதே. உலகம் செழித்து வாழ மழை வேண்டும் என்று எண்ணுவதே அருள்பெறும் வழியாகும்.


· உடல்அழுக்கை நீராடுவதால் போக்குவது போல், மனஅழுக்கை வழிபாட்டால் போக்க வேண்டும்.


· இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம்,பாவம் என்னும் இருவித துன்பங்களில் இருந்து தப்பிக்க முடியும்.


· நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும்.


· உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக்கூடும்.


· கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல, கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.-வாரியார்