கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

கலைஞர் தொலைகாட்சிக்கு காப்பி தொலைகட்சின்னு பேர் வச்சிருக்கலாம்.. அவ்ளோ அருமையா காபி பண்றாங்க . அது எப்படி பட்ட காபின்ன மானாட மயிலாட நிகழ்ச்சியில கலா மாஸ்டர் சொல்ற மாதிரி அப்படி ஒரு அட்டகாசமான காபி. சேனல் மாத்திகிட்டு இருக்கும்போது கலைஞர் டிவி நடுவுல வந்ததால அத பாக்கலாமேன்னு பாத்தா கருத்து யுத்தம் அப்படிங்குற தலைப்புல நிகழ்ச்சி போட ஆரம்பிச்சாங்க சரி அப்படி என்ன தான் பண்ண போறாங்க அப்படின்னு பாத்தா அது கருத்து சொல்ற களமாம் நிகழ்ச்சிய தொகுத்து வழங்குன ஒருத்தர் (அவர் பேர் சரியா கவனிக்கல) சொன்னார், பார்வையாளர்கள் சொல்றாங்க கொஞ்ச பேர் வச்சி பேச வேண்டியது தானே ஏன் நிறைய பேர வச்சி பேச சொல்றீங்க அப்படின்னு கேக்குராங்கலம் அதுக்கு அவர் பதில்  சொல்றார் இது மேதவிகள் பேசும் களமல்ல , அனைவருக்கும் பங்கு கொள்ளும் களம் அதான் நிறைய பேர் பேசுறாங்க  அப்படின்னு சொன்னார். சரிடான்னு பாத்தா அதுல பேசுனது 10 வயசு பொண்ணு அதுவும் படிச்சத அப்படியே ஒப்பிக்குது , அத விட கொடும அதுல பேசுனவங்க எல்லாமே செயற்கையா தான் பேசுனாங்க.. இதையெல்லாம் விட அந்த நிகழ்ச்சி ஆரம்பிச்சதுமே நியாபத்துக்கு வந்த ஒரே நிகழ்ச்சி விஜய் டிவில வரும் நீயா நானா தான் நினைவுக்கு வந்துச்சு அத விட முக்கியம் என்னன்னா நீயா நானா கோபிநாத் மாதிரியே கருத்து யுத்தம் தொகுத்து வழங்குனவரும் பேசுனதுதான். மாதிரி  பேசுனாகூட பரவால்லன்னு சொல்லலாம் கோபிநாத் பேசுற மாதிரி அதே வார்த்தை அதே மேனரிசம், ஸ்டைல் , இப்படி அட்ட காபி அடிச்சுட்டு பேர மட்டும் கருத்து யுத்தம் அப்படின்னு வச்சதுக்கு பதிலா நீயா நானா பார்ட்-2 அப்படின்னுவச்சிருக்கலாம். அப்படி இல்லாட்டி நீயா நானா ஜெராக்ஸ் அப்படின்னு வச்சிருக்கலாம்.

இலவசங்களே நமது நாட்டின் சாபக்கேடு.. ஏன் தருகிறார்கள், இலவசம் எதற்கு தருகிறார்கள் இலவசம், ஏன் தருகிறார்கள் எனில் ஓட்டு வாங்க , எதற்கு தருகிறார்கள் எனில் ஆட்சியை பிடிக்க.. ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆட்ச்சியை பிடித்து கொள்ளை அடிக்க வேண்டும் . அவ்வளவுதான் அவர்களின் எண்ணம் நாடு முன்னேற வேண்டும். நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் அப்படியல்ல அவர்கள் எண்ணம். நாம் முன்னேற வேண்டும் நம் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். நாமே முதல்வராகவோ, பிரதமராகவோ இருக்க வேண்டும். நம்மிடமே அதிகாரம் அனைத்தும் இருக்க வேண்டும்.எல்லா துறைகளிலும் நாமே முதலாவதாக இருக்க வேண்டும். அதற்கு நான் தான் ஆள வேண்டும். நாமே ஆள வேண்டுமெனில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். நாம் ஜெயிக்க மக்கள் ஓட்டு போடா வேண்டும். நமக்கே அவர்கள் வாக்களிக்க அவர்களை சந்தோஷ படுத்த வேண்டும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சத்தை நேரடியாக எப்படி கொடுப்பது இந்த ஜனநாயக நாட்டில் அதற்கு பயன்படுவது தான் இலவசங்களும் தள்ளுபடிகளும். இலவசங்களை வாங்கும் நாம் நன்றி கடனாக நம்மை ஐந்து வருடங்கள் அவர்களிடம் அடகு வைக்கிறோம். அடுத்த ஐந்தாவது வருடம் ஓட்டுக்கு காசு தரவும், தன்னை வளபடுதிக்கவும் , தான் குடும்பத்தை வளப்படுத்தவும் கொள்ளை அடிகிறார்கள். கொள்ளை அடிக்க அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் அந்த அதிகாரத்தை கொடுத்தது யார் நாம் தானே. அப்போது அவர் கொள்ளை அடிக்க யார் காரணம் அதிகாரத்தை கொடுத்த நாம் தான் காரணம். இலவசம் கொடுக்கிறான், தள்ளுபடி பண்றான், காசு குடுக்கிறான், நமக்கு என்ன பண்ணுவான், நம்ம ஜாதிக்கு என்ன பண்ணுவான் அப்படின்னு ஓட்டு போடுறத விட்டுட்டு நம்ம ஊருக்கு என்ன பண்ணுவான் நம்ம நாட்டுக்கு என்ன பண்ணுவான் அப்படின்னு யோசித்து ஓட்டு போடும் மக்கள் அதிகமானால் தான் இந்த நாடு ஜனநாயக வழியில் சென்று வல்லரசாகுமே தவிர மற்றபடி பணநாயக வழியில் சென்று அடிமையாகத்தான் ஆகும்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் போராடி பயனில்லை மக்களே வாங்குவதை நிறுத்த வேண்டும், அன்பளிப்பு, இலவசம், தள்ளுபடி, இப்படி எந்த பெயரில் லஞ்சம் வந்தாலும் அதை வாங்காமல் தவிக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் நாமே லஞ்சம் வாங்ககூடாது என போராடுவதும் கொள்ளை அடித்துவிட்டார்கள் என போராடுவதும் கேலிக்குரியது. இலவசங்கள் வேண்டாம் , தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, வீடு இதெல்லாம் வேண்டாம் . இலவசங்களை வாங்குவதற்கு போராடுவதை விட்டுவிட்டு அவற்றை வாங்குவதற்கான வழியை உருவாக்கி தரவேண்டுமென போராடுங்கள். இலவசங்கள் வாங்குவதையும் லஞ்சம் கொடுப்பதையும் நாம் நிறுத்தினால் லஞ்சம் வாங்குவதை அதிகாரிகளும் , இலவசங்கள் கொடுப்பதையும் அரசியல்வாதிகளும் நிறுத்திவிடுவார்கள்.உங்களது கணிணியில் ப்ராபர்டியில் உங்களது லோகோ (logo ) மற்றும் உங்களது இன்பர்மேசன் வரவைப்பது என்பதை பற்றி பார்போம் . உங்கள் கணிணியில் உங்களது லோகோவோ அல்லது உங்கள் கம்பெனி லோகோவோ கணிணியின் ப்ராபர்ட்டியில் தெரிய வேண்டுமெனில் முதலில் உங்கள் கம்பெனி லோகோவை 103 x 102 சைஸ் கொண்ட பைலாக மாற்றி அதற்கு OEMLOGO என பெயரிட்டு .BMP சேமிக்க வேண்டும் . அடுத்து இன்பர்மேசன் எப்படி வரவைப்பது என்பதை பற்றி பார்போம்

ஒரு notepad பைலை ஓபன் செய்து 

[General]
Manufacturer = "YOUR ORGANIZATION NAME"

[support Information]
line1 = <information >
line2 = <information >
line3 = <information >
line4 = <information >
line5 = <information >
line6 = <information >

என டைப் செய்து OEMINFO.INI என பெயரிட்டு சேமித்துக்கொள்ள வேண்டும் உங்களுக்கு எத்தனை வரிகள் வேண்டுமோ அத்தனை லைன் சேர்த்து கொள்ளலாம். எடுத்துகாட்டாக கீழே உள்ளது போன்று டைப் செய்த்து சேமித்துக்கொள்ள வேண்டும்.

[General]
Manufacturer = "GENUINE SYSTEMS"

[support Information]
line1 = Os Installation
line2 = Software Installation
line3 = Network Problems
line4 = Any Hardware Problems
line5 = Please Contact
line6 = GENUINE SYSTEMS

இப்போது சேமித்த இரண்டு பைல்களையும் காபி செய்து
C:\WINDOWS\system32 என்ற போல்டரில் பேஸ்ட் செய்து விடவும்.
இப்போது உங்கள் கணிணியில் MY COMPUTER RIGHT CLICK செய்து பிராபர்டியில் பார்த்தல் உங்கள் லோகோவும் உங்கள் இன்பர்மேசனும் தெரியும்

லோகோ பைல் உள்ளிடுவதற்கு முன்

லோகோ பைல் உள்ளிட்ட பிறகு


support information என்பதை கிளிக் செய்தவுடன் அதன் இன்பர்மேசன்கள் தனி விண்டோவில் ஓபன் ஆகும். இந்த வழிமுறையை பின்பற்றி உங்கள்
கணினியிலும் பிராபர்டியை மாற்றலாம் .


ஜாதிகள் இல்லையடி பாப்பா என பள்ளியில் பாடநூலில் வைத்தவர்கள்பள்ளி முடித்து வெளியே வரும்போது மாற்று சான்றிதழில் ஜாதியின்பெயர் போடாமல் தருவதில்லையே ஏன்?

இந்த அரசும் சமுதாயமும் பிறந்ததிலிருந்து சாகும் வரை ஒரு மனிதனை ஜாதிய அடிப்படையிலே பிரித்து வைத்திருகிறார்கள். பள்ளியில்உதவித்தொகை தருவதில் ஆரம்பித்த ஜாதி இன்று ஊழல் வரை ஜாதியைவைத்தே அடையாள படுத்துகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஜாதியைஅடையாளபடுத்தி தாழ்த்தி பேசவோ அல்லது தன்னை தற்காத்துகொள்ளவோ தான் ஜாதிய பயன்படுத்துகிறார்கள். ஜாதியை ஒழிக்கவேண்டும் என போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் ஜாதிய வாக்கெடுப்பு தேவை என போராடுகிறார்கள். வெள்ளையர்கள்நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த போது தனக்கு வேண்ட பட்டவரையும்வேண்ட படாதவரையும் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்ததினால் தான் நாம்நிறைய காலம் அடிமை பட்டு கிடந்தோம்.நாம் ஜாதிவாரியாகபிரிந்திருந்தால் வெள்ளையர்கள் செய்த அதே வேலையைத்தான் இந்தஅரசியல் வாதிகள் தன்னை காப்பாற்றிக்கொள்ள செய்வார்கள் . ஜாதியஅடிப்படையில் ஒன்று படும் போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. அநீதியை எதிர்க்கவோ ஊழலை ஒழிக்கவோ ஒன்றுமே செய்யமுடியாமல்போகும். ஏனெனில் ஒரு ஜாதிக்காரர் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போதுஅதற்கு எதிர் ஜாதிக்காரர்மற்றொரு கட்சிக்கு ஆதரவளிக்கிறார். இதனால்கட்சி காரர் தவறு செய்யும் போது ஆதரவளிப்பவர் சுட்டிகாட்டமுடிவதில்லை அப்படிசெய்தால் இவருக்கு அல்வா கொடுத்துவிட்டு எதிர்ஜாதியை சேர்த்துகொள்வர்.வேறு வழி இல்லாமல் இந்த ஜாதிக்காரர் மற்றகட்சிக்கு ஆதரவு அளிக்கிறார். தவறு செய்பவர்கள் இந்த ஜாதி இல்லையெனில் அந்த ஜாதி என மாறி மாறி குதிரை ஏறுவர்களே தவிர ஜாதியாலும் ஜாதிகட்சியாலும் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லைஅப்படி இருக்க ஏன் ஜாதியின் பெயராலும் , ஜாதிக்கட்சிகளின் பெயராலும்ஒன்று கூட வேண்டும். ஒரு கொள்கைக்காக ஒன்று சேருங்கள். ஜாதியைமறந்து , மதத்தை மறந்து கொள்கைக்காக மட்டுமே ஒன்று சேருங்கள். அப்படி ஒன்று சேர்ந்தால் ஜாதியை ஒழிக்கலாம் , லஞ்சத்தை ஒழிக்கலாம், ஊழலை ஒழிக்கலாம் , ஜனநாயகத்தை காக்கலாம் இல்லையேல்மக்களாட்சி மறைந்து மன்னராட்சி மலரும் மீண்டும் அனைவரும்அடிமைகளாவோம். அபப்டி மாறினால் சுதந்திரம் பெற்று தர எந்த காந்தியாலும் முடியாது. நம்மை அடகு வைக்க ஆயிரம் எட்டப்பன்கள் காத்திருகிறார்கள்.ஒரு அணிலுக்கு முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு 2 ஆப்பிள்

அணில் சாப்டுடுச்சு 1 சாப்பிடல அது ஏன்னு சொல்லுங்க...

ஏன்னா அந்த ஆப்பிள் பிளாஸ்டிக்.

மறுபடி ஒரு அணிலுக்கு முன்னாடி 3 ஆப்பிள் இருக்கு

ஆனா 3 ஆப்பிளையும் அணில்

சாப்பிடல அது ஏன்னு சொல்லுங்க...

ஏன்னா இப்போ அணில் பிளாஸ்டிக்

இப்போ ஒரு ஒரிஜினல் அணில் முன்னால

ஒரு ஒரிஜினல் ஆப்பிள் இருக்கு ஆனால்

அணில் சாப்பிடல ஏன்னு சொல்லுங்க ...

ஏன்னா அணில் டிஸ்கவரி சேனல்ல இருக்கு

ஆனால் ஆப்பிள் TV முன்னாடி இருக்கு

இப்போ அணிலும் ஆப்பிளும் TV இருக்கு

ஆனா அணில் ஆப்பிள் சாப்பிடல

ஏன்னு சொல்லுங்க.

ஏன்னா அணிலும் ஆப்பிளும் வெவ்வேற சேனல்ல

சரி இப்போ அணிலும் ஆப்பிளும் ஒரே சேனல்

இருக்கு ஆனா அணில் ஆப்பிள் சாப்பிடல

ஏன்னு சொல்லுங்க ..

ஏன்னா TV ஆப் ஆகி இருக்கு ..

நோ நோ கோவப்படாதீங்க நானும் இப்படித்தான்

கோவபட்டேன் இத படிக்கும் போது

ன்பே


ருயிரே

ன்பம் இல்லையடி

ரைந்து திங்களாய்

ன்னைகாணமல்

னமாகி விட்டதடி நெஞ்சம்

ன்று உன்னைகான்பேன் என

ங்கி தவிக்குதடி என் நெஞ்சம்

யப்படாதே கண்ணே

ரு வார்த்தை சொல்

டி வருவேன்

வ்வளவு எதிர்ப்பையும் அத்துமீருவேன் உன்னை மணக்க.....