கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

இலவசங்களே நமது நாட்டின் சாபக்கேடு.. ஏன் தருகிறார்கள், இலவசம் எதற்கு தருகிறார்கள் இலவசம், ஏன் தருகிறார்கள் எனில் ஓட்டு வாங்க , எதற்கு தருகிறார்கள் எனில் ஆட்சியை பிடிக்க.. ஆட்சியை பிடிக்க வேண்டும். ஆட்ச்சியை பிடித்து கொள்ளை அடிக்க வேண்டும் . அவ்வளவுதான் அவர்களின் எண்ணம் நாடு முன்னேற வேண்டும். நாட்டு மக்கள் முன்னேற வேண்டும் அப்படியல்ல அவர்கள் எண்ணம். நாம் முன்னேற வேண்டும் நம் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும். நாமே முதல்வராகவோ, பிரதமராகவோ இருக்க வேண்டும். நம்மிடமே அதிகாரம் அனைத்தும் இருக்க வேண்டும்.எல்லா துறைகளிலும் நாமே முதலாவதாக இருக்க வேண்டும். அதற்கு நான் தான் ஆள வேண்டும். நாமே ஆள வேண்டுமெனில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் ஜெயிக்க வேண்டும். நாம் ஜெயிக்க மக்கள் ஓட்டு போடா வேண்டும். நமக்கே அவர்கள் வாக்களிக்க அவர்களை சந்தோஷ படுத்த வேண்டும். அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும். லஞ்சத்தை நேரடியாக எப்படி கொடுப்பது இந்த ஜனநாயக நாட்டில் அதற்கு பயன்படுவது தான் இலவசங்களும் தள்ளுபடிகளும். இலவசங்களை வாங்கும் நாம் நன்றி கடனாக நம்மை ஐந்து வருடங்கள் அவர்களிடம் அடகு வைக்கிறோம். அடுத்த ஐந்தாவது வருடம் ஓட்டுக்கு காசு தரவும், தன்னை வளபடுதிக்கவும் , தான் குடும்பத்தை வளப்படுத்தவும் கொள்ளை அடிகிறார்கள். கொள்ளை அடிக்க அவர்கள் அதிகாரத்தை பயன்படுத்துகிறார்கள் அந்த அதிகாரத்தை கொடுத்தது யார் நாம் தானே. அப்போது அவர் கொள்ளை அடிக்க யார் காரணம் அதிகாரத்தை கொடுத்த நாம் தான் காரணம். இலவசம் கொடுக்கிறான், தள்ளுபடி பண்றான், காசு குடுக்கிறான், நமக்கு என்ன பண்ணுவான், நம்ம ஜாதிக்கு என்ன பண்ணுவான் அப்படின்னு ஓட்டு போடுறத விட்டுட்டு நம்ம ஊருக்கு என்ன பண்ணுவான் நம்ம நாட்டுக்கு என்ன பண்ணுவான் அப்படின்னு யோசித்து ஓட்டு போடும் மக்கள் அதிகமானால் தான் இந்த நாடு ஜனநாயக வழியில் சென்று வல்லரசாகுமே தவிர மற்றபடி பணநாயக வழியில் சென்று அடிமையாகத்தான் ஆகும்.

லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என மக்கள் போராடி பயனில்லை மக்களே வாங்குவதை நிறுத்த வேண்டும், அன்பளிப்பு, இலவசம், தள்ளுபடி, இப்படி எந்த பெயரில் லஞ்சம் வந்தாலும் அதை வாங்காமல் தவிக்க வேண்டும். லஞ்சம் வாங்கும் நாமே லஞ்சம் வாங்ககூடாது என போராடுவதும் கொள்ளை அடித்துவிட்டார்கள் என போராடுவதும் கேலிக்குரியது. இலவசங்கள் வேண்டாம் , தொலைக்காட்சி, காஸ் அடுப்பு, வீடு இதெல்லாம் வேண்டாம் . இலவசங்களை வாங்குவதற்கு போராடுவதை விட்டுவிட்டு அவற்றை வாங்குவதற்கான வழியை உருவாக்கி தரவேண்டுமென போராடுங்கள். இலவசங்கள் வாங்குவதையும் லஞ்சம் கொடுப்பதையும் நாம் நிறுத்தினால் லஞ்சம் வாங்குவதை அதிகாரிகளும் , இலவசங்கள் கொடுப்பதையும் அரசியல்வாதிகளும் நிறுத்திவிடுவார்கள்.