கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.

உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.

உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.

உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.

தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம்.

வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம்.

வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.

வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம்.

பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம்.

பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.

எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்.

என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்.

கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம்.

கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம்.

தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம்.

வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்.

மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்.

குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம்.

கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம்.

வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்.

விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம்.

முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.

மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.

ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.


நமது கணினிகளில் என்னதான் ஆண்டி வைரஸ் நிறுவி இருந்தாலும்
அதையும் மீறி சில வைரஸ்கள் நமது கணினியை  பதம் பார்த்து விடுகின்றன. அதிலும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால்  நமது கணினியில் taskmanager, regedit, msconfig, cmd prompt  ஆகியவை மற்றும் இன்னும் பிற சர்வீஸ்களும் disable  செய்ய பட்டிருக்கும் . ஆண்டி வைரஸ் நிறுவி கணினியை பாத்து காத்தாலும் இழந்த சர்வீஸ் களை மீண்டும் பெற நாம் என்ன செய்யலாம் என்பதை பற்றி இங்கே பார்க்கலாம் . நாம் என்னதான் பெரு முயற்சி  செய்தாலும்   இழந்த சர்வீஸ் களை பெற முடியாது அதை பெறுவதற்கான வழி  முறைகள் கீழே சொல்லி   இருக்கிறேன் இழந்த சர்வீஸ்களை  திரும்ப பெற  இரண்டு மென்பொருள் நமக்கு தேவை படுகின்றன 

1,  Microsoft .Net Framework 2.0

2,   Re-enable software

முதலில் உங்கள் கணினியில்  Microsoft .Net Framework 2.0 நிறுவி விடுங்கள் 
ஏற்கனவே நிறுவி இருந்தால் தேவை இல்லை இப்போது  Re-enable software 
ரன் செய்யுங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல  திரை வரும்  அதில் 
இழந்த சர்வீஸ் களை  உங்கள் எலியால் கில்லி  re - enable  என்ற 
பொத்தனை கிளிக் செய்தால் உங்கள் கணினி restart  ஆகும்.


உங்கள் கணினி restart ஆகி கணினியின் திரை வந்தவுடன்  சோத்தித்து 
பாருங்கள் இழந்த சர்வீஸ்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டிருக்கும் 
சர்வீஸ்கள்
 • regedit window
 • cmd Console
 • Run Command option
 • Folder Options
 • Task manager option
 • Option of Task Scheduler
 • Context menu
 • Control Panel
 • System Restore option
 • Search option in the Window
 • msconfig option
 • My computer
    Dotnet FrameWork தரவிறக்க  சுட்டி 
    Re - Enable தரவிறக்க சுட்டி 
   
  பதிவு பயனுள்ளதாக உள்ளதா பின்னுட்டத்தில் தெரிய படுத்தவும்


இந்த உலகில் பிறந்த உயிரினங்களில் சிறு பூச்சி முதல் மனிதன் வரை ஆசைக்கு அடிபணியாத உயிரினங்களே இல்லை என கூறலாம். அவ்வாறு ஆசைக்கு அடிப்பட்ட நாம் ஏதாவது ஒரு வகையில் நமது வாழ்க்கையை தொலைக்கிறோம். இதில் விலங்கினங்கள் ஏதாவதொரு (தனது) புலன்களின் ஆசையினால் மட்டுமே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்கின்றன. ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் ஐம்புலன்களாலும் வாழ்க்கையை தொலைக்கின்றான்.

உதாரணமாக, மீன் எதனால் அழிகிறது? தூண்டில் புழுவுக்கு ஆசைப்பட்டு வாயை திறந்து புழுவைச் சாப்பிடுகிறது. மரணம் மீனைச் சாப்பிடுகிறது.
வண்டு எதனால் அழிகிறது? நாசியன் நறுமணத்தால் பூவில் மயங்கிக்கிடக்கிறது. பூவோ கருவுற்று, காயாகும் நோக்கில் இதழ்கழை மூடி விடுகிறது. மூங்கிலைத் துளைக்கும் வலிய வண்டு, நாசியின் நறுமணச் சுவையில் மயங்கி மெல்லிய பூவைக் கூடத் துளைக்க முடியாமல் உள்ளேயே கிடந்து சாகிறது.

அசுணமா என்றொரு பறவை. நல்ல இசை என்றால் அதற்கு நாட்டம். வேடுவர்கள் புல்லாங்குழல் எடுத்து வாசிக்கும் போது, இசைக்கு மயங்கி அவர்கள் தலைக்கு மீது வட்டம் இடும். வேடுவர்கள் உடனே கீழே நெருப்பை மூட்டி, பறை என்ற தோல் கருவியை எடுத்து தாருமாறாகத் தட்டியவுடன் நெருப்பில் விழுந்து வேடுவர்க்கு உணவாகி விடுகிறது. காது அதன் அழிவிற்கு காரணம்.

விட்டில் பூச்சி ஏன் அழிகிறது? கண் தான் காரணம். நெருப்பை பார்த்ததும் அதன் அருகில் சென்று நெருப்பிலேயே விழுந்து இறந்து விடுகிறது. கண்ணால் அழிகிறது விட்டில் பூச்சி.
யானைக்கு அழிவு எதனாலே? யானையைய் பிடிப்பவர்கள் காட்டிலே பழக்கிய பெண் யானையை தொலைவில் நிறுத்துவார்கள். அதன் அருகில் பள்ளம் வெட்டி இலை தழைகளைப் போட்டு இலேசாக மூடி வைப்பார்கள். காட்டில் அலையும் ஆண் யானை, மெய் இன்பம் என்ற உடல் சுகம் கருதி பெண் யானையை நோக்கி வரும். வழியில் பள்ளத்தில் விழுந்து மனிதர்களிடம் மாட்டிக் கொள்ளும். பிறகு தன் வாழ்நாள் முழுவதும் மரம் இழுத்து மனிதன் இடும் பணிகளைச் செய்து துன்பம் அடையும். மெய் என்ற சரீர ஆசையே யானையின் அழிவுக்கு காரணம்.

கண்ணாலே விட்டிலும், காதாலே அசுணமா பறவையும், நாசியால் வண்டும், வாயால் மீனும், மெய்யாலே யானையும் அழிகிறது. ஆனால் மனிதனோ இந்த ஒவ்வொரு புலன்களாலும் அழிவைத் தேடுகிறான். இப்படி ஐம்புலன்களாலும் அழிவைத் தேடுவதற்கு மூலக்காரணம் ஆசை என்னும் மனதை அடக்காமையே. ஆசை இல்லாமல் இருக்கவே முடியாது. ஆனால் ஆசைக்குள் நாம் முழுமையாக சிக்கிக் கொண்டால் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.

ஆசையைய் பற்றிய ஆசையைய் துறந்தோர் கூறும் அறிவுரைகள்:


 • புத்தர்… ஆசையே துன்பத்திற்கு காரணம்.

 • இராமகிருஷ்ணர்…நமக்குள் ஆசை இருக்கலாம். நாம் ஆசைக்குள் சிக்கிவிடக்கூடாது. படகு தண்ணீருக்குள் இருந்தால் ஆபத்து இல்லை. படகுக்குள் தண்ணீர் புகுந்து விட்டால் ஆபத்து தவிர வேறு எதுவும் இல்லை.

 • ஆசையின் கொடுமை, அதை அடையும் வரை ஆர்வம் இருக்கும். அடைந்ததும் நிறைவு வராது.

ஆத‌லால் அள‌வான‌ ஆசைக‌ளோடு வாழ்ந்து சுக‌ம் பெருவோம்.

பெண்களின் அகராதியில் ...

I LOVE YOU DA
எத்தன பேர்கிட்ட இப்படி சொல்லி இருப்பேன் 

I MISS YOU DA
உன்ன பாக்காம இருக்குற சுகமே தனிதான் 

YOU ARE MY LIFE DA
இன்னொருவன் கிடைக்கிற வரைக்கும் 

YOU ARE MY CHELLAM
வேர வழி இல்ல அதான் 

I WANT TO MARRY YOU
வேர யாரும் சிக்கல மா அதான்