கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

கணினியில் இயங்குதளம் விண்டோஸ் xp  FAT  format ல் இன்ஸ்டால் செய்து இருக்குறீர்கள் . உங்களுக்கு  NTFS  format  ல்இருந்தால் நன்றாக இருக்குமே என நினைத்தால் அதை எப்படி இயங்குதளத்தை புதியதாக நிறுவாமல் அப்படியே  FAT  ல் இருந்து NTFS க்கு மாற்றுவது என்பதை இப்போது பார்க்க போகிறோம். 

முதலில் command prompt ஓபன் செய்யுங்கள் 

பிறகு command prompt  ல்  இந்த 
command ஐ type செய்து  enter  செய்யுங்கள்  
 CONVERT  C:  /FS:NTFS 
 
இப்போது  சிஸ்டம் restart  ஆகும் 
 
பிறகு reconversion  process  நடக்கும்
 
process முடிந்த பிறகு  உங்கள் இயங்குதளம்
  
NTFS file format க்கு  மாரி இருக்கும் 
 
நீங்கள் பயன்படுத்திய file அனைத்தும் 
 
அப்படியே இருக்கும் file format மட்டுமே மாரி இருக்கும்  


* சூப்பருக்கும் ஆப்பருக்கும் என்ன வித்தியாசம் 
    அன்பான மனைவி இருந்தால் அது சூப்பர் 
    அவளுக்கு அழகான தங்கச்சி இருந்தா அது ஆப்பர்.

* இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு 
   இதுக்கு  நடுவுல நமக்கு எதுக்கு ஆளு   

* ஒருவன்   : ஏன் மச்சான் கால் பன்னால 
    மற்றவன் : பலன்சே இல்ல மச்சான் 
    ஒருவன்  :  பாலன்ஸ் இல்லன்னா சுவத்துல சாஞ்சுகிட்டு கால் 
                        பண்ண வேண்டியது தானே?
   மற்றவன் : ????

* சண்டே  ஆனா ஜாலியா சண்டை போடலாம்  ஆனால் 
   மண்டே ஆனா ஜாலியா மண்டைய போடா முடியுமா ..

* போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்ட போலீஸ் வரும் 
   ரயில்வே  ஸ்டேஷனுக்கு போன் போட்ட ரயில் வருமா...

*  குளவி கொட்டின வலிக்கும்
   தேள் கொட்டின வலிக்கும் 
     ஆனா ,
    முடி கொட்டினா வலிக்குமா....

* தண்ணீரை தண்ணின்னு சொல்லலாம் 
   பன்னீரை பன்னின்னு சொல்ல முடியுமா..

* எமன் சிரிச்சால் 80 ல் மரணம் 
  உமன் சிரிச்சால் 20 மரணம் .

* தண்ணி அடிச்சா வீக் ஆகும் பாடி 
   பொண்ணு சிரிச்ச வளரும் தாடி

* டீ  கடையில் இருக்கும் மசாலா வடை 
   திரும்பி பாக்க வைக்கிறது ரெட்ட சடை 
 
* ஆடிக்கு பின்னால் ஆவணி 
   தாடிக்கு பின்னால் தாவணி.

* நண்பர்கள் எப்போதும் ஒன்னுக்குள் ஒன்னு 
   அவர்களை பிரிந்தால் கரணம் பொண்ணு 

நன்றி SMS அனுப்பிய நண்பர்களுக்கு



ஒரு நாள் பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் ஐஸ் கிரீம் கடைக்குச் சென்றான். ஒரு இருக்கையில் உட்கார்ந்தான். ‘ஐஸ் கிரீம் கோன் எவ்வளவு?’ என்று கடையில் உள்ள  பணிப்பெண்ணிடம் கேட்டான். அவள் பத்து ருபாய் என்றாள். தன் கையில் இருந்த சில்லரைக்காசுகளை எண்ணத் தொடங்கினான். பிறகு அவன் ‘ஒரு சிறிய அளவு ஐஸ் கிரீம் எவ்வளவு?’ என்று கேட்டான். அவள் பொறுமையிழந்து “எட்டு ரூபாய்” என்று பதிலளித்தாள். அந்தச் சிறுவன் ‘எனக்கு ஒரு சிறிய ஐஸ் கிரீம் கப் வேண்டும்’ என்றான். அவனுக்கு ஐஸ் கிரீம் கிடைத்தது, தொகைக்கான சீட்டும் கிடைத்தது. பிறகு, பணம் கொடுத்துவிட்டு வெளியேறினான்.  
                                        
            அந்த வெற்றுத்தட்டை எடுக்க வந்த பணிப்பெண், மனமுருகிப் போனாள். அந்தத் தட்டுக்கு அடியில் ஒரு ரூபாய் நாணயம் அந்தப் பெண்ணின் சேவைக்காக வைக்கப்பட்டிருந்தது. அந்த சிறுவன் ஐஸ் கிரீமை வாங்குவதற்கு முன்னால் அந்தப் பெண்ணின் சேவைக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி இருந்திருக்கிறான். அவன் தனது உணர்வையும், அக்கறையையும் காட்டி விட்டான். தான் தன்னைப் பற்றி எண்ணுவதற்கு முன்னால் ‘பிறரைப் பற்றி’ எண்ணியிருந்திருக்கிறான்.


நாம் எல்லோரும் அந்தச் சிறுவனைப் போல் எண்ணினால், நாம் வாழ்வதற்குரிய மகத்தான இடத்தைப் பெறுவோம். அக்கறையையும், பண்பட்ட தன்மையையும் காட்டுங்கள். பிறரைப் பற்றி எண்ணுதல் என்பது ஒரு அக்கறையான மனப்பாங்கைக் காட்டும்.

 

சீனநாட்டு சிந்தனையாளரான கன்பூஸியஸின் சிந்தனைகளில் ஒன்று தான் மேலான்மை. அதைப் பற்றி ஒரு சிறுகதை… நாட்டை ஆள்வதற்கு தகுதி உள்ளவனாக ஆக ஒருவன் என்ன செய்ய வேண்டும் என்று சூசாங் கேட்டார். அதற்கு கன்பூஸியஸ் அவன் தன்னிடமுள்ள ஐந்து அருமையான விஷயங்களில் கவனம் செலுத்தி, நான்கு அசிங்கமான விஷயங்களை ஒதுக்கிட வேண்டும் என்று பதில் சொன்னார்.
ஐந்து அருமையான விஷயங்கள்:
        ·         ஒரு கனவான் ஆடம்பரமின்றி பணிவோடு இருக்க 
               வேண்டும்.
·         பிறரை வருத்தாமல் அவர்களிடம் வேலை வாங்க 
          வேண்டும்.
·         ஆசை இருக்கலாம் பேராசைப் படக்கூடாது.
·         பெருமைப் படலாம், கர்வம் கூடாது.
·         கவரும் விதமாக நடந்து கொள்ளலாம், முரடனாக 
       இருக்கக்கூடாது.
நான்கு அசிங்கமான விஷயங்கள்:
·         ஒருவனை சாகடிப்பது காட்டுமிராண்டித்தனம்.
·         போதிய அவகாசம் தராமல் வேலைகளை 
        முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது  
        காட்டுமிராண்டித்தனம்.
·         என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுவது, 
       தெளிவாக இல்லாமல் அவ்வேலை சுத்தமாக 
       நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது 
       கொடிய செயல்.
·         ஒருவனுக்கு கொடுக்க விரும்புவது போலக் கூறி 
     அதைக் கொடுக்காமல் இருப்பது அற்பத்தனம்.
                                
“நாம் நினைப்பதைப் போல மற்றவர்கள் நடந்து கொள்ளவில்லை என்பதற்காகக் கோபப்பட வேண்டாம். சிலசமயங்களில் நாம் நினைப்பதைப் போல, நம்மாலையே நடந்து கொள்ள முடிவதில்லையே”.

ஒரு ஜென் மத குருவிடம் சீடன் ஒருவன் “தங்களுடைய கொள்கை என்ன என்று  கேட்டார்?”.  குருவின் பதில்… “பசி எடுத்ததால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது”. சீடர் மறுபடியும் இவ்வாறு கேட்டார். “பசித்தால் புசிப்பது, உறக்கம் வந்தால் உறங்குவது” இதைத்தான் எல்லோரும் செய்கிறார்களே என்றார். ஞானி சிரித்தார். மற்றவர்களுக்கும் எனக்கும் வேறுபாடு உள்ளது. நீங்கள் சாப்பிடும் போது உங்கள் மனம் சாப்பாட்டில் இருக்காது. அங்கும் இங்குமாக அலைபாயும். எதையோ நினைத்துக் கொண்டு, பேசிக் கொண்டு சாப்பிடுவீர்கள். நான் சாப்பிடும் போது சாப்பிட மட்டும் செய்கிறேன், வேறு எந்த சிந்தனையும் கிடையாது. நீங்கள் தூங்கும் போது உங்களது மனம் தூக்கத்தில் இல்லை, கவலையில், சிந்தனைகளில் மற்றும் குழப்பத்தில் அலைகிறீர்கள். ஆனால் தூக்கத்தின் போது நான் தூங்க மட்டுமே செய்கிறேன். “செய்வதைச் சரியாகச் செய்வதே யோகம்” என்று கீதை கூறுகிறது.


செய்யும் தொழிலில் ஒன்றிவிடும் போது, அது தியானமாகி விடுவதோடு செய்யப்படுவதும் முழுமையாக அமைந்து விடுகிறது. அத்துடன் செய்யும் தொழிலின் பாரம், துன்பம் எதுவும் இல்லாமல் போய்விடுகிறது.

வானத்திலிருந்து பெய்யும் பருவமழை குறைந்து விட்டால் உலகில் தான தருமங்களும் குறைந்து விடும்.


தூய்மையான உள்ளத்தில் வஞ்சக எண்ணங்களுக்கு சிறிதும் இடம் கிடையாது.
சந்தனம் எவ்வளவு தேய்த்தாலும் தன் நறுமணத்தினையே பிறருக்கு கொடுக்கும். அதுபோல நல்லவர்கள் வறுமை அடைந்தாலும் தன் நற்குணத்திலிருந்து மாறுவதில்லை.


உலகில் இரண்டு ஜாதியினரே இருக்கிறார்கள். ஒன்று ஆண், மற்றொன்று பெண்.


தாமரை இலைமேல் தண்ணீர் போல, உடம்பின் மீது உள்ள பற்றுக்களை குறைத்துக் கொண்டு வாழுங்கள்.


நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் வறுமை நிலை அடைந்தாலும், தன் மேன்மையான தன்மை விட்டுக்கொடுக்காமல் தன்னால் ஆன உதவியை பிறருக்குச் செய்வார்கள்.


ஆண்டுகள் பலவாக அழுது நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் மாண்டவர்கள் மீண்டு வரப்போவதில்லை. காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. இறப்பு நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அதனால், உங்களால் முடிந்த நன்மைகளை பிறருக்குச் செய்யுங்கள்.
 


-அவ்வையார்


உங்கள் கணிணி சில நேரங்களில் shutdown  ஆவதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்கிறது.  எனில் கண்டீப்பாக உங்களுக்கு இந்த பதிவு மிக உபயோகமாக இருக்கும்.

உங்கள் கணினியை வேகமாக shutdown செய்ய  என்ன செய்யலாம் ?

நேரடியாக poweroff  பட்டனை அழுத்தலமா?
இல்லை power  cable  கலட்டி விடலாமா ?

இப்படி செய்வது நல்லது அல்ல . ஏனெனில் இப்படி செய்யும்போது  உங்கள் file 
மற்றும் harddisk corrupt ஆக நிறைய வாய்புள்ளது.
எனவே file க்கும் harddisk க்கும் எந்த பதிப்பும் இன்றி எளிதாக வேகமாக 
shutdown  எளிமையான வழி இதோ...

முதலில் Task Manager  (CTRL +ALT +DEL)
பிறகு  Shutdown tab கிளிக் செய்யவும் 
CTRL  பட்டனை அழுத்திக்கொண்டு Turnoff  கிளிக் செய்யவும் 
இப்போது உங்கள் கணிணி வேகமாக Shutdown  ஆவதை  காண்பீர்கள்.


உங்களுக்கு பயனுள்ள பதிவு தானே இது ?


ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.


· சாந்தம் என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.


· சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.

ரமணர்

நாம் வாழும் இந்த வாழ்க்கை ஆற்றின் நீரோட்டம் போன்றது. அதைத் தடுத்து நிறுத்துவதால் பயன் ஏதும் ஏற்படாது. ஆனால், வழி மாற்றி வடிகால் அமைத்து பயன்படுத்தினால் பயன் பெறலாம்.


சொர்க்கம் என்பது இறந்தபிறகு தரப்படும் பரிசோ, நரகம் என்பது இறந்தபின்அளிக்கப்படும் தண்டனையோ அல்ல. இவை இரண்டுமே வாழும் போதே மனிதன் அனுபவிக்கும் இருநிலைப்பாடுகளே.


மனமும், புத்தியும் தூய்மையாய் இருக்க இருக்க அந்த மனிதன் எண்ணும் எண்ணங்கள் பிரகாசம் மிக்கதாக இருக்கும். எவனிடத்தில் இந்த எண்ணம் அதிகபட்ச உச்சத்தை அடைகிறதோ அவனே மகான் ஆகிறான்.


பணத்தைக் கொடுப்பது மட்டுமே தானமல்ல. நல்ல உள்ளம் படைத்தவர்கள் பிறரிடம் அன்பு மொழிகளால் கூட தானத்தைச் செய்ய முடியும். ஆண்டவன் எந்த செல்வத்தை தந்திருக்கிறாரோ அதைக் கொண்டு நல்லவனாக வாழ்தலே போதுமானது.


இருள் வந்துவிட்டதே என்று கவலை கொள்வதால் பயனில்லை. ஒரு விளக்கை ஏற்றினால் அது தானாகவே விலகி விடும். அதேபோல் நல்லெண்ணங்களுக்கு இடம் கொடுத்தாலே தீயவை தானாகவே ஒடுங்கி விடும்.

- சின்மயானந்தர்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்  மிக சிறந்த கண்டுபிடிப்பு  








 இல்லை 









இல்லை 









இல்லை 





இல்லை 







இது பில்கேட்ஸ்ன் சிறந்த தயாரிப்பு 








நாமெல்லோரும் ஆமை மற்றும் முயல் கதையை நன்கு அறிவோம். முயல் தனது வேகத்தைப் பற்றி தற்பெருமை அடித்துக் கொண்டது. அது ஆமையை போட்டிக்கு அழைத்தது. ஆமையும் அந்த சவாலை ஏற்றுக் கொண்டது. ஆமை ஒரே சீராக போய்க் கொண்டிருந்தது. முயலோ வேக வேகமாக ஓடி ஆமையைத் தனக்குப் பின்னால் வெகுதூரம் விட்டு முன்னேறியது. அது, தான் போட்டியை நிச்சயமாக வென்று விடுவோம் என்ற தன்னம்பிக்கையில் ஒரு சிறு தூக்கம் போடலாம் என்று முடிவெடுத்தது. அது கண்விழித்துப் பார்த்தபோது, போட்டி ஞபாகத்திற்கு வரவே உடனே ஓடத்துவங்கியது. ஆமை ஏற்கனவே இறுதிக் கோட்டை அடைந்து வெற்றி பெற்று விட்டதைத்தான் பார்க்க முடிந்தது.சீரான தொடர்ச்சியான முயற்சிக்கு கட்டுப்பாடு தேவை. சீரற்ற குறிக்கோளற்ற முயற்சியை விட இது முக்கியமானதாகும்.
           நகைச்சுவையால் மக்களின் மனங்களில் சிறந்த கருத்துக்களை விதைத்து, சிரிப்பு என்னும் பயிரை வளர்த்தவர் கலைவாணர் என்ற சிறப்பு பட்டத்தை பெற்ற திரு. என். எஸ். கிருஷ்ணன் அவர்கள். கிருஷ்ணன் அவர்கள் இந்த முயல், ஆமையை இவ்வாறு பள்ளி மாணவர்களுக்கு கூறுகிறார். முயல், ஆமையில் எது ஜெயித்தது என்று பள்ளி மாணவர்களிடம் கேட்டார். ‘ஆமை ஜெயித்தது, முயல் தோற்றது’ என்றனர் மாணவர்கள். கலைவாணர் பதில், அதை அப்படிச் சொல்லக்கூடாது. முயல் ஆமையால் தோற்றது (முயல் + ஆமையால் தோற்றது. முயல் + ஆமை = முயலாமை). முயலாமை என்பது முயற்சி செய்யாமை. முயற்சி இல்லாதவர்கள் வலிமையுடையர்களாக இருந்தாலும் தோற்றுத்தான் போவார்கள். 
             கட்டுப்பாட்டுடன் ஒன்றை செய்வதும், தவறு நடந்த பிறகு வருந்துவதும் மிகவும் வேதனை தருபவை. பலருக்கு இவ்விரண்டில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது. இதில் எது அதிகம் வேதனை தருவது என்று நீங்கள் ஊகித்துக் கொள்ளுங்கள்.
                                                                
கட்டுப்பாடு ‍ பழக்கத்திற்கு கஷ்டமாகினும் வாழ்க்கைக்கு முறையான வெற்றி தரும் சக்தியாகும்.

முதுமைக்கு வேண்டியதை இளமையில் இருந்தே தேடுவது போல, மறுபிறவிக்கு வேண்டிய நன்மைகளை இப்பிறவியிலேயே தேடவேண்டும்.


· போதும் என்ற திருப்தி உனக்கு என்று உண்டாகிறதோ அன்று இன்ப மாளிகையின் முற்றத்தை நீ அடைந்து விட்டதாக உணரலாம்.


· என் வயலுக்கு மட்டும் மழை பொழிய வேண்டும் என்று எண்ணாதே. உலகம் செழித்து வாழ மழை வேண்டும் என்று எண்ணுவதே அருள்பெறும் வழியாகும்.


· உடல்அழுக்கை நீராடுவதால் போக்குவது போல், மனஅழுக்கை வழிபாட்டால் போக்க வேண்டும்.


· இறைவனின் பெயரைச் சொல்வதால் பயம்,பாவம் என்னும் இருவித துன்பங்களில் இருந்து தப்பிக்க முடியும்.


· நல்ல உணவு வகைகளை உண்பதால் உடல் நலம் பெருகும். நல்ல நூல்களை படிப்பதால் மனநலம் உயரும்.


· உனக்குச் சரி என்று படுவதையே சரி என்று பிறரிடம் சாதிக்காதே. இன்று சரி என்று உனக்குத் தோன்றிய ஒன்றே நாளை தவறு என்று மாறிவிடக்கூடும்.


· கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்குச் சேவை செய்வது போல, கண்ணுக்குத் தெரிந்த கடவுளான உயிர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்.



-வாரியார்















எனது இந்த பதிவுக்கு பிள்ளையார் சுழி போட்ட  GSR க்கு நன்றி 

மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும்  தற்போது  தேவை இல்லாத அழைப்புகள்,  தேவை இல்லாத குறுஞ்செய்திகள்  வருவது  அதிகமாகி விட்டது அதுவும் advertisment  எனப்படும் விளம்பர குருன்செய்திகளே அதிகம் வருகிறது .பெரும்பாலும் நமது மொபைல் என் தெரிய நாமே காரணமாகி விடுகிறோம் .உதரணமாக இணையதளத்தில் இலவச குறுஞ்செய்தி வசதி  உள்ளது எனக்கொண்டால் நாம் இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதில் அவர்களுக்கு என்ன அப்படி ஒரு அக்கறை என பார்த்தல்  நாம் முதலில் நமது மொபைல் என்னை பதிவு செய்வோம் அதான் பிறகு நமது நண்பர்களின் எண்களை அதில் சேமித்து வைப்போம் அப்படியாக கிடைக்கும் மொபைல் எண்களை தொகுத்து ஒரு database  உருவாக்கி எடுத்துகாட்டாக 10000  மொபைல் நம்பர் உள்ள ஒரு database  5000  ரூபாய் என  நிறுவனங்களிடம் என விற்று விடுகின்றனர் இப்படிபல நிறுவனங்களிடமும் database  விற்று விடுகின்றனர் . அது மட்டுமல்லாமல்  நீங்கள் வேலை நிமித்தமாக கொடுக்க படும் resume  மற்றும் browsing  சென்டர்களில்  பராமரிக்கப்படும் வருகை பதிவேடு போன்றவைகளில் இருந்து நமது மொபைல் எண் களவாட பட்டு database களாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ய படுகிறது . 

                  சமீபத்தில் எனக்கு நடந்த ஒரு நிகழ்வு அடிக்கடி எண் மொபைல் எண்ணுக்கு விளம்பர குறுஞ்செய்திகள்  வந்து கொண்டே இருந்தது முதலில் நான் customer care ல்  தொடர்பு கொண்டு  சொன்னேன் அவர்கள் DND எனப்படும் Do  Not  Disturb  எனப்படும் சர்வீஸ் ல் பதிவு செய்ய சொன்னார்கள்  நானும் பதிவு செய்தேன் . ஒரு அறுபது நட்களிக்கு பிறகு மீண்டும் customer care  ல் தொடர்பு கொண்டு  நெட்வொர்க் சம்பந்தமான  குறுஞ்செய்திகள் வருவது நின்று விட்டன . ஆனால் விளம்பர குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருகின்றன என புகார் செய்தேன். இந்த முறை எந்த என்னில் இருந்து குறுஞ்செய்தி வந்தது என்ற என்னும் கொடுத்தேன். பிறகும் கூட விளம்பர குறுஞ்செய்தி வருவது நிற்கவில்லை.வெவ்வேறு எண்களில் இருந்து விளம்பர குருசெய்திகள்  வந்து கொண்டிருந்தன .ஆனால் மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அழைப்பு வந்தது . தொடர்பு கொண்டவர் சொன்னது இது தான் எண் மொபைல் எண்ணில் இருந்து உங்களுக்கு SMS  வந்ததால் தங்கள்  customer  careல் தொடர்பு கொண்டு புகார் கொடுத்த காரணத்தால் அவருடைய  மொபைல் எண் முடக்கப்பட்டு விட்டது  என்றும் மற்றும் VODAFONE  கம்பெனியில் இருந்து  அவருக்கு சம்மன் வந்துள்ளதாகவும் கூறினார் . அது மட்டுமின்றி SMS  அனுப்பியதற்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் தனது நண்பனிடம் கொடுத்த address  proof ஆல் இப்படி நிகழ்ந்துவிட்ட  தென்றும்  தெரிய படுத்தினர் . தேவையற்ற குறுஞ்செய்திகள் ,அழைப்புகள் வந்தால் customer care ல் தெரியபடுத்துங்கள் நடவடிக்கை எடுகிறார்கள். என்னுடைய எண் AIRTEL தடை செய்யப்பட்ட எண் VODAFONE ஆக தவறு நடந்தால் புகார் தெரிவித்தால் நெட்வொர்க் நிறுவனத்தார் கண்டீப்பாக நடவடிக்கை எடுகிறார்கள் .

          ஆகவே நண்பர்களே தங்களது அடையாள அட்டை , புகைப்படம்  போன்றவற்றை தொலைதுவிடுவதன்  மூலமும் இப்படி நடக்க வாய்ப்புள்ளது . மற்றும் உங்கள் மொபைல் எண்ணை முடிந்த மட்டும் பொது  இடங்களில் கொடுப்பதையும் சமூக வலைதளங்களில் (Social network ) இணையங்களில் பதிவதை முடிந்தளவு தவிர்க்கலாம் .

இந்த பதிவு பனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறன் 


ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத்
தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து
செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும்
வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதன் எஜமானன் கூறினான்.

"பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும்
அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது
எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது.

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது.

நீதி: அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப்படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யவேண்டும்..!!


ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினார். சிலம்பை ஒரு மாதத்திற்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு நிறைய பொன், பொருள் பரிசாக அளிக்கப்படும் என்று கூறினார். அதற்கு பிறகு யாரிடமாவது இருந்து கண்டுபிடிக்கப்பட்டால் “மரண தண்டனை” என்றும் அறிவித்தார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு சிக்கியது. அந்த சிலம்பு பற்றி அங்குள்ள மக்களிடம் விசாரித்தார் துறவி. உடனே கொடுத்தால் பரிசு, குறிப்பிட்ட நாள்களுக்கு மேல் கொடுத்தால் “மரண தண்டனை” என்றனர். துறவி அரசர் குறிப்பிட்டிருந்த நாட்களுக்குப் பிறகு சிலம்பைக் கொண்டு சேர்த்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டி இருக்கும்” என்றார் அரசர்.

அற வழியில் நடந்த அந்த துறவியின் பதில்…
  • ஒன்று, கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசை பட்டதாக இருக்கும்.
  • மரண தண்டனை கிடைக்கும் என்று நான் அஞ்சிக் கொடுக்காமலேயே இருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தமாகிவிடும் (மரணத்திற்கு பயப்படுவது இல்லை).
  • சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவன் என்று ஆகிவிடும். (நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை)

“இப்போது உமக்கு மரண தண்டனை கிடைக்குமே” என்றார் அரசர். துறவி கம்பீரமாக அரசனைப் பார்த்து “மூடனே… அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம் சட்டத்தை விட மேலானது” என்று கூறி சென்றார். அரசர் தலைவணங்கி துறவியைய் அனுப்பி வைத்தார்.

“உங்களிடம் சிறந்ததை உலகத்திற்கு கொடுங்கள்.
உலகம், சிறந்ததை உங்களுக்கு கொடுக்கும்”.

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.

8) முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.
ஆதலினால் தியானிப்பீர்...!

@ பணம் என்பது தீமை அல்ல, பணத்தைத் தவறாகக் கையாள்வதுதான் தீமை.
- மகாத்மா காந்தி.

@ பணம் என்பது ஏதாவது ஒரு வடிவத்தில் எப்போதுமே தேவைப்படுகிறது. 
- மகாத்மா காந்தி.

 @ பணத்தை முதலீடு செய்வதற்கான நடைமுறைத் திட்டங்களை உருவாக்க முடிந்தவர்களுக்கு எப்பொழுதுமே அதற்கான பணம் கிடைத்து விடுகிறது.
   - நெப்போலியன்

  @ பணத்தை வீணடித்தால் நீங்கள் பணத்தை மட்டும் இழந்திருப்பீர்கள். ஆனால் நேரத்தை வீணடித்தால் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியை இழந்திருப்பீர்கள். 
 - மைக்கல் லீபோப்

@ ஒழுக்கம் இல்லாதவனிடம் பணமிருந்தும் பயனில்லை 
     - பெர்னாட்ஷா. 

@ உங்களுக்கு பொருளாதாரப் பிரச்சனை இருப்பதாக நீங்கள் கருதினால்,     கவனமாக யோசித்துப் பாருங்கள். பணம்தான் பிரச்சனையா அல்லது  பணத்தை நிர்வகிப்பதில்தான் பிரச்சனையா ? உண்மையில் பணப்   பிரச்சனை என்பது யாருக்குமே கிடையாது. கொடுக்கல் வாங்கலை நிர்வகிக்கும் சிந்தனைப் பிரச்சனைதான் உண்டு
      - ராபட். எச். ஷீல்லர்.

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

 1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

 2.. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். 

 3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.

 4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.
                                     
 5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.
                                            
 6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.
                                                        
 7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.
                                         
 8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
 
 9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
                                                                        
10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.
                         
11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.
                            
12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.
                                         
13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.
                       
14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.
                            
15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
                                              
17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
                                                      
18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
                                                                                                                                                           
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி