கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

1) எந்த விசயமாக இருந்தாலும் அல்லது எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதை அழகாககையாளுங்கள்.

2)
அர்த்தமில்லாமலும், தேவையில்லாமலும் பின் விளைவுகளைஅறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.


3)
தானே பெரியவன், தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

4)
விட்டுக் கொடுங்கள்.

5)
சில நேரங்களில்,சில சங்கடங்களை சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள்.

6)
நீங்கள் சொன்னதே சரி, செய்வதே சரி, என்று கடைசி வரை வாதாடாதீர்கள்

7)குறுகிய மனப்பான்மையை விட்டொளியுங்கள்.

7)
உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கும், அங்கே கேட்டதை இங்கும் சொல்வதை விடுங்கள்.

8)
மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கவலைப்படாதிர்கள்.

9)
அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதிர்கள்.

10)
எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டா இல்லையோ,சொல்லி கொண்டிருக்காதிர்கள்.

11)
கேள்விபடுகிற எல்லா விசயங்களையும் அப்படியே நம்பி விடாதிர்கள்.

12)
உங்கள் கருத்துகளில் உடும்புபிடியாய் இல்லாமல் கொன்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்.

13)
மற்றவர்களுக்கு உரிய மரியாதையை கட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் மறக்காதிர்கள்.

14)
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாமல் நடந்து கொள்ளாதிர்கள்.


15)
பேச்சிலும், நடத்தையிலும், திர்மிர்தனத்தையும் தேவையில்லாத மிடுக்கையும் தவிர்த்து அடக்கத்தையும் பண்பாட்டையும் காட்டுங்கள்.


16)
அவ்வபோது நண்பர்கள் உறவினார்கள் நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

17)
பிணக்கு ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன்வாருங்கள்.

18)
தேவையான இடங்களில் நன்றியும், பாராட்டையும் சொல்ல மறவாதிர்கள்.



ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன வெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது. என்றார் கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? என்று கேட்டார். சீடன் சொன்னான், குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது.
புன்முறுவலோடு ஞானி சொன்னார், ''இது தான் காதல்.''

பின்னர் ஞானி, சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது. சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? சீடன் சொன்னான், இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை.
இப்போது ஞானி சொன்னார், ''இது தான் திருமணம்.''

---
ஒஷோ






1) இன்பமான சந்தோஷமான நேரங்களில்

மௌனம் - சம்மதம்



2) உண்மையான உறவுகள் பிரியும் போது

மௌனம் - துன்பம்



3) காதலில்

மௌனம் - சித்ரவதை



4) தோல்வியில்

மௌனம் - பொறுமை



5) வெற்றியில்

மௌனம் - அடக்கம்



6) இறுதியில்

மௌனம் - மரணம்


1) ஆண்களை விட பெண்கள் எப்போதும் அழகுதான்
ஏனென்றால் உண்மையை விட பொய்
எப்போதும் அழகாத்தான் இருக்கும்


2) நீ விழிதிருப்பாய் என்ற நம்பிக்கையில்
நான் உறங்க செல்கிறேன்
இதயத்தை பார்த்து இமைகள் சொன்னது


3) உலகத்தை நீ ரசிக்க வேண்டுமானால்
உன் காதலியோடு இரு
உன்னை உலகம் ரசிக்க வேண்டுமானால்
உன் நண்பர்களோடு இரு


4 ) மொக்கைகள்
திரும்பி திரும்பி பார்க்க
வைத்தது திரும்பத அவளின் முகம்
ஆனால்
அவள் திரும்பியதும் மாறியது
என் முகம்
ஏன்னா
அவ சப்ப பிகர் மச்சி


5) டாக்டர் : என்ன சோப் யூஸ் பண்றீங்க ?
சர்தார் : கோபால் சோப், கோபால் பேஸ்ட், கோபால் பிருஷ்
டாக்டர் : அது என்ன இன்டர்நேஷனல் கம்பெனியா
சர்தார் : இல்ல கோபால் என்னோட ரூம் மேட்..