கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

கலைஞர் தொலைகாட்சிக்கு காப்பி தொலைகட்சின்னு பேர் வச்சிருக்கலாம்.. அவ்ளோ அருமையா காபி பண்றாங்க . அது எப்படி பட்ட காபின்ன மானாட மயிலாட நிகழ்ச்சியில கலா மாஸ்டர் சொல்ற மாதிரி அப்படி ஒரு அட்டகாசமான காபி. சேனல் மாத்திகிட்டு இருக்கும்போது கலைஞர் டிவி நடுவுல வந்ததால அத பாக்கலாமேன்னு பாத்தா கருத்து யுத்தம் அப்படிங்குற தலைப்புல நிகழ்ச்சி போட ஆரம்பிச்சாங்க சரி அப்படி என்ன தான் பண்ண போறாங்க அப்படின்னு பாத்தா அது கருத்து சொல்ற களமாம் நிகழ்ச்சிய தொகுத்து வழங்குன ஒருத்தர் (அவர் பேர் சரியா கவனிக்கல) சொன்னார், பார்வையாளர்கள் சொல்றாங்க கொஞ்ச பேர் வச்சி பேச வேண்டியது தானே ஏன் நிறைய பேர வச்சி பேச சொல்றீங்க அப்படின்னு கேக்குராங்கலம் அதுக்கு அவர் பதில்  சொல்றார் இது மேதவிகள் பேசும் களமல்ல , அனைவருக்கும் பங்கு கொள்ளும் களம் அதான் நிறைய பேர் பேசுறாங்க  அப்படின்னு சொன்னார். சரிடான்னு பாத்தா அதுல பேசுனது 10 வயசு பொண்ணு அதுவும் படிச்சத அப்படியே ஒப்பிக்குது , அத விட கொடும அதுல பேசுனவங்க எல்லாமே செயற்கையா தான் பேசுனாங்க.. இதையெல்லாம் விட அந்த நிகழ்ச்சி ஆரம்பிச்சதுமே நியாபத்துக்கு வந்த ஒரே நிகழ்ச்சி விஜய் டிவில வரும் நீயா நானா தான் நினைவுக்கு வந்துச்சு அத விட முக்கியம் என்னன்னா நீயா நானா கோபிநாத் மாதிரியே கருத்து யுத்தம் தொகுத்து வழங்குனவரும் பேசுனதுதான். மாதிரி  பேசுனாகூட பரவால்லன்னு சொல்லலாம் கோபிநாத் பேசுற மாதிரி அதே வார்த்தை அதே மேனரிசம், ஸ்டைல் , இப்படி அட்ட காபி அடிச்சுட்டு பேர மட்டும் கருத்து யுத்தம் அப்படின்னு வச்சதுக்கு பதிலா நீயா நானா பார்ட்-2 அப்படின்னுவச்சிருக்கலாம். அப்படி இல்லாட்டி நீயா நானா ஜெராக்ஸ் அப்படின்னு வச்சிருக்கலாம்.

0 comments:

Post a Comment