கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

ஜாதிகள் இல்லையடி பாப்பா என பள்ளியில் பாடநூலில் வைத்தவர்கள்பள்ளி முடித்து வெளியே வரும்போது மாற்று சான்றிதழில் ஜாதியின்பெயர் போடாமல் தருவதில்லையே ஏன்?

இந்த அரசும் சமுதாயமும் பிறந்ததிலிருந்து சாகும் வரை ஒரு மனிதனை ஜாதிய அடிப்படையிலே பிரித்து வைத்திருகிறார்கள். பள்ளியில்உதவித்தொகை தருவதில் ஆரம்பித்த ஜாதி இன்று ஊழல் வரை ஜாதியைவைத்தே அடையாள படுத்துகிறார்கள். ஏதோ ஒரு காரணத்தால் ஜாதியைஅடையாளபடுத்தி தாழ்த்தி பேசவோ அல்லது தன்னை தற்காத்துகொள்ளவோ தான் ஜாதிய பயன்படுத்துகிறார்கள். ஜாதியை ஒழிக்கவேண்டும் என போராடிய பெரியார் பிறந்த இந்த மண்ணில் பிறந்தவர்கள்தான் ஜாதிய வாக்கெடுப்பு தேவை என போராடுகிறார்கள். வெள்ளையர்கள்நம்மை அடிமை படுத்தி வைத்திருந்த போது தனக்கு வேண்ட பட்டவரையும்வேண்ட படாதவரையும் பிரித்து ஆளும் சூழ்ச்சி செய்ததினால் தான் நாம்நிறைய காலம் அடிமை பட்டு கிடந்தோம்.நாம் ஜாதிவாரியாகபிரிந்திருந்தால் வெள்ளையர்கள் செய்த அதே வேலையைத்தான் இந்தஅரசியல் வாதிகள் தன்னை காப்பாற்றிக்கொள்ள செய்வார்கள் . ஜாதியஅடிப்படையில் ஒன்று படும் போது நம்மால் எதுவும் செய்ய முடியாது. அநீதியை எதிர்க்கவோ ஊழலை ஒழிக்கவோ ஒன்றுமே செய்யமுடியாமல்போகும். ஏனெனில் ஒரு ஜாதிக்காரர் ஒரு கட்சிக்கு ஆதரவளிக்கும் போதுஅதற்கு எதிர் ஜாதிக்காரர்மற்றொரு கட்சிக்கு ஆதரவளிக்கிறார். இதனால்கட்சி காரர் தவறு செய்யும் போது ஆதரவளிப்பவர் சுட்டிகாட்டமுடிவதில்லை அப்படிசெய்தால் இவருக்கு அல்வா கொடுத்துவிட்டு எதிர்ஜாதியை சேர்த்துகொள்வர்.வேறு வழி இல்லாமல் இந்த ஜாதிக்காரர் மற்றகட்சிக்கு ஆதரவு அளிக்கிறார். தவறு செய்பவர்கள் இந்த ஜாதி இல்லையெனில் அந்த ஜாதி என மாறி மாறி குதிரை ஏறுவர்களே தவிர ஜாதியாலும் ஜாதிகட்சியாலும் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லைஅப்படி இருக்க ஏன் ஜாதியின் பெயராலும் , ஜாதிக்கட்சிகளின் பெயராலும்ஒன்று கூட வேண்டும். ஒரு கொள்கைக்காக ஒன்று சேருங்கள். ஜாதியைமறந்து , மதத்தை மறந்து கொள்கைக்காக மட்டுமே ஒன்று சேருங்கள். அப்படி ஒன்று சேர்ந்தால் ஜாதியை ஒழிக்கலாம் , லஞ்சத்தை ஒழிக்கலாம், ஊழலை ஒழிக்கலாம் , ஜனநாயகத்தை காக்கலாம் இல்லையேல்மக்களாட்சி மறைந்து மன்னராட்சி மலரும் மீண்டும் அனைவரும்அடிமைகளாவோம். அபப்டி மாறினால் சுதந்திரம் பெற்று தர எந்த காந்தியாலும் முடியாது. நம்மை அடகு வைக்க ஆயிரம் எட்டப்பன்கள் காத்திருகிறார்கள்.



2 comments:

ஜாதியாலும் ஜாதிகட்சியாலும் மக்களுக்கு யாதொரு பயனும் இல்லை"

தப்பு.

ஜாதி கட்சிக்ளாலேயேதான் ஜாதிய்னருக்குப் பலசலுகைகள் கிடைத்தன.

பெருங்கட்சிகள், தங்கள் ஜாதி மக்களைப்பயன்படுத்தி ஓட்டுகள் வாங்கி ஆட்சியமைத்தவுடன் அம்மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அம்மக்கள் மேற்சாதியன்ரால சுரண்டப்பட்டு தரித்திரவாழ்க்கை நடத்துவதைக்கண்டுதான், அம்மக்கள் தங்களுக்கென கட்சிவேண்டும் என நினைக்க, சாதிக்கட்சிகள் தோன்றின.

அம்பேத்கர் ஒரு ஜாதித்தலைவர். அவரால்தான் தலித்துகள் பிறர் சுரண்டல்களிலிருந்து தப்பித்து, தன்மானம் காத்தார்கள்.

ஜாதி வேண்டுமா அல்லது இருக்கா இல்லையா என்பது கேள்வியல்ல.

மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்கை வேண்டும். யார் கொடுப்பார்கள் ? நீங்கள் கொடுப்பீர்களா?

இன்றிருக்கும் ஜாதி கட்சிகளால் மக்களுக்கு பயன் இல்லை என்பது உண்மைதானே பாட்டாளி மக்கள் கட்சியால் வன்னியர்களுக்கு என்ன பயன் , விடுதலை சிறுத்தைகள் கட்சியால் தலித்களுக்கு என்ன பயன் இருவரும் சேரும் கட்சிக்கு ஜால்ரா அடிபவர்கள் தானே தனக்கு பிரச்னை என்றால் ஜாதி சாயம் பூசி தப்பிதுகொள்பவர்கள் தானே

Post a Comment