கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

முயன்றால் முடியாதது என்று ஒன்று இல்லை..
என்பது இந்த உலகிற்கு மறுபடி நிருபிக்கப்பட்டுள்ளது

ஏழையாய் பிறந்த ஏழை குடும்பத்தில் 
வளர்ந்த ஒபாமா இன்று உலகின் ஆட்சி 
அதிகாரம் அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளார் 


21  வருடங்களுக்கு முன் பாட்டி வீட்டில் எள்ளளவு அதிகாரம் இல்லாத நாற்காலியில் அமர்திருக்கும் ஒபாமா

 அவருடைய தன்னபிக்கை விடாமுயற்சி காரணமாக உலகின் மொத்த அதிகாரமும் கொண்ட  நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்

OBAMA

O- Originally
B - Born in
A - Africa to
M - Manage
A – America கடல்வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் அதை நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாக பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும், குற்றவாளிகளும் அனுப்பப்பட்டனர். பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது, மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம் புறப்பட்ட இடமே போய்ச் சேர்வோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை.
ஒரு புதுக்கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் கொலம்பஸீக்கு ஒதுக்கப்பட்ட மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்கத் தான் தயார். அந்த உணவு துணை கொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பணம் தொடர்வோம், திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாக்கப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.
இவ்வாறு எண்ணியதை எண்ணியவாறு அடைவதை திருவள்ளுவர் ‘வினைத்திட்பம்’ அதாவது ‘மனஉறுதி’ என்னும் அதிகாரத்தில் மிகவும் அழகாக கூறுகிறார்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப, எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
விளக்கம்: ஒன்றைச் செய்ய எண்ணியவர் அதைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற மனஉறுதியை உடையவராக இருப்பதால், அடைய நினைத்தவற்றை எல்லாம் அவர் எணணப்படியே அடைவர். 

நமது வாழ்க்கையானது அனைத்துப் பருவ காலங்களிலும் மலரும் மலரைப் போன்று இருக்க வேண்டும். அப்படியல்லாமல் ஒருவன் வாழ்க்கை வாழ்வானேயானால் அவன் எவ்வளவு பண வசதி பெற்றிருந்தாலும் வாழ்க்கை முடிகின்ற காலங்களில் கல்லறை இல்லாத சுவடுகள் போன்று ஆகிவிடும்.
அனைவரின் கேள்வியும் ஒன்றே எனக்கு புரிகிறது. “எப்படி அனைத்து பருவ காலங்களிலும் மலரும் மலரைப் போல வாழ்வது?”. நமக்கு இரண்டு வகையான கல்வி தேவைப்படுகிறது. ஒன்று,  எப்படி நாம் சம்பாதிப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பது. இன்னொன்று, எப்படி வாழ்வது எனபதைக் கற்றுக் கொடுப்பது.
சிலர் தங்கள் செய்யும் தொழிலில் மூழ்கிப் போய், தங்களுடைய குடும்பம், உடல் நலன், சமூகப் பொறுப்புகளைப் புறக்கணித்து விடுகிறார்கள். ‘நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்’ என்று கேட்டால் ஆண்கள் தங்களது குடும்பத்திற்காகவே இவ்வாறு செய்வதாகப் பதில் கூறுவார்கள்.
இன்று நிறைய குடும்பங்களில் பெற்றோர்கள் வீட்டை விட்டு போகும் போது குழந்தைகள் தூங்கி கொண்டு இருக்கின்றனர். மீண்டும் வீடு திரும்பும் போதும் குழந்தைகள் தூங்கிக் கொண்டு இருக்கின்றனர். குடும்பத்திற்காகப் ‘பணம் சம்பாதிக்கிறேன்’ என்ற பெயரில் குடும்பத்தையே பார்க்காமல் குழந்தைகளுக்குத் தேவையான அன்பு, பாசம், இவை எதுவும் இல்லாமல் இறுதியில் பணம் மட்டுமே எஞ்சி இருக்கிறது. இது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
அவ்வாறு பணத்தைச் சம்பாதித்தவர்களின் நிலை எதிர்காலத்தில் எவ்வாறு இருந்தது பற்றிய கருத்தாய்வு:
1923ல் உலகிலுள்ள பெரிய பணக்காரர்களில் எட்டு பேர் சந்தித்தார்கள். அவர்களுடைய செல்வ வளத்தைக் கூட்டிப் பார்த்தால், அது அந்த நாட்களில் அமெரிக்க அரசின் செல்வ வளத்தை விட அதிகமாக இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. இவர்களுக்கு எப்படி பணத்தைச் சம்பாதிப்பது என்பதும், எப்படி பணத்தைச் சேர்ப்பது என்பதும் வெகு நன்றாகத் தெரியும்.  ஆனால் 25 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
·         பெரிய எஃகு கம்பெனியின் தலைவரான சார்லஸ் ஷ்வாப் திவாலாகி இறப்பதற்கு முன்னால் ஐந்து ஆண்டுகள் கடன் வாங்கப்பட்ட முதலை வைத்துக் கொண்டே வாழ்ந்தார்.
·         பெரிய பெட்ரோல் எரிவாயு கம்பெனியின் தலைவரான ஹோவர்ட் ஹப்சன், சித்த சுவாதி இல்லாது போனார்.
·         பெரிய சரக்குக் கம்பெனியின் தலைவரான ஆர்தர் கடன் பண நெருக்கடியில் நொடிந்து போய் இறந்தார்.
·         நியூயார்க் பங்கு சந்தையின் தலைவரான ரிச்சர்ட் விட்னி சிறையில் அடைக்கப்பட்டார்.
·       ஜனாதிபதி கேபினட்டில் உறுப்பினரான ஆல்பெர்ட் ஃபால் அகைதியாக இறக்கட்டும் என்று சிறையிலிருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
·         வால் ஸ்ட்ரீட்(Wall Street) பெரிய புள்ளியான ஜெஸ்ஸி லிவர்மோர் தற்கொலைச் செய்து கொண்டார்.
·         உலகின் மாபெரும் வியபார ஏக போக கம்பெனியின் தலைவர் ஐவர் க்ரூகெர்  தற்கொலலை செய்து கொண்டார்.
·         பன்னாட்டு கடனமைப்பு வங்கியின் தலைவர் லியோன் ஃப்ரேசர் தற்கொலை செய்து கொண்டார்.
இவர்கள் மறந்து போனது “எப்படி வாழ்க்கையை வாழ்வது” என்பதைத் தான்.
“பணம் பசித்தவர்களுக்கு உணவையும், நோயாளிகளுக்கு மருந்தையும், தேவைப்படுவர்களுக்கு துணிகளையும் தரும் பண்டமாற்றத்திர்க்கான ஒரு வழியே அன்றி வாழ்வதற்கான மூச்சுக்காற்றில்லை”.

ஓர் இளைஞன் சாக்ரடீஸிடம் வந்து வெற்றிக்கான இரகசியத்தைப் பற்றிக் கேட்டான். அதற்கு சாக்ரடீஸ் மறுநாள் காலை ஆற்றங்கரைக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். மறுநாள் காலை ஆற்றங்கரையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சாக்ரடீஸ் அந்த இளைஞனை ஆற்றை நோக்கி உள்ளே வரும்படி கேட்டுக் கொண்டார். கழுத்தளவு நீர் வரை உள்ளே வந்தவுடன் அந்த இளைஞனை நீரினுள் வைத்து அமுக்கினார். அவன் வெளியே வர முயற்சி செய்தான். ஆனாலும் அவனை அப்படியே அமுக்கியவாறு அவனது முகம் நீல நிறமாக மாறும் வரை வைத்திருந்தார். சற்றுப் பொறுத்து அவனது தலையை நீரினுள்ளிருந்து வெளியே இழுத்தவுடன் அந்த இளைஞன் செய்த முதல் வேலையே தன்னால் இயன்ற அளவு காற்றை மீண்டும் மீண்டும் உள்ளிழுத்தான். சாக்ரடீஸ் அவனிடம் “நீ நீருக்குள் இருந்த போது நீ எதை அதிகம் விரும்பினாய்?” என்று கேட்டார். அந்த இளைஞன் “காற்று” என்று பதிலளித்தான்.

        சாக்ரடீஸ், “வெற்றியின் இரகசியமே அது தான் .நீ எவ்வளவு அதிகமாக காற்றை விரும்பினாயோ அது போன்றே வெற்றியையும் விரும்பினால் உனக்கு அது கிட்டும்” என்று சொன்னார். இதைத் தவிர வேறு எந்த ரகசியமும் இல்லை.

      “ஒரு சுட்டெரிக்கும் ஆசையே சாதனைகளின் தொடக்கமாகும். ஒரு சிறிய தீயால் எப்படி அதிக வெப்பத்தை தர முடியாதோ, அது போல ஒரு பலவீனமான ஆசையால் மிகப்பெரிய வெற்றியை உருவாக்க முடியாது”.

 

1         நான் இங்கு மதுவினால் ஏற்படும் தீமைகளை பற்றி குறிப்பிடுகின்றேனே தவிர அதை நீ செய்யக்கூடாது என்று சொல்லுகிற உரிமை எனக்கு இல்லை.
2         மேலை நாடுகளில் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் ஆண்களும் பெண்களும் வாரத்தின் இறுதி நாளில் அலுவலக வேலை முடிந்த பிறகு மது அருந்தி அந்த வாரத்தின் இறுதியைய் கொண்டாடுகின்றனர்.
3         ஒரு வேலை இளம் ஆடவன் தனியாக மது அருந்துகிற சூழ்நிலை ஏற்பட்டால் அங்குள்ள இளம் பெண்கள் அந்த ஆடவனையும் துணையாக சேர்த்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வார இறுதியைய் கொண்டாடுகின்றனர்.இது மேலை நாடுகளின் கலாச்சாரம்.
4         நாம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நம்மிள் நம்மக்கள் சிலர் நமது கலாச்சாரத்தில் இருந்து சற்றும் விலகோம். அதனாலேயே இன்றளவில் சுவாமி விவேகானந்தரைப் பற்றி அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பேசப்படுகிறது மற்றும் அவரின் போதனைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

மதுவினால் ஏற்படும் தீமைகள்:
1         சித்திரம் போல் இருக்கும் உடம்பு அழியத்துடங்கும்.
2         குடிக்கும் வேளையில் நண்பர்களிடம் வீண் பகைகளைக் கொண்டு வந்து சேர்க்கும். சில சமயம் அதுவே நண்பர்களின் பிரிவிற்கு காரணமாக கூட அமையும்.
3         நீ என்ன சொன்னாலும் உலகம் உன்னை நம்பாது அதுவும் குடிப்போதையில் இருக்கும் போது.
4         நீ நிதானமாகப் பேசினாலும் கூட 'இது குடிகாரன் பேச்சு' என்று உலகம் உன்னை பின்னே தள்ளிவிடும்.
5         நீ குடிக்கும் மது உன் குடும்பத்தின் வாழ்வைக் குடித்து விடும்.
6         நீ கஷ்டப்பட்டு உருவாக்கிய‌ வருமானம் பாழாகும்.
7         மதுவினால் நீ நோயுற்றால் உனக்காக யாரும் வருத்தப்படமாட்டார்கள்.
8         குடும்பத்திலும் சுமுதாயத்திலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு உயிரினமாக மாறி விடுவாய்.
9         இளைஞர்களுக்காக, எல்லாவற்றிற்கும் மேலாக நற்குணப் பெண்கள் அதிகம் உன்னை விரும்பமாட்டார்கள். ஏன்? அருகில் வரவே பயப்படுவார்கள்.

பழமொழிகள் கூறுவது:
1         குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு.
2         மது உள்ளே போனால் மதி வெளியே வரும்.
3         கள்ளுக் குடிச்சவனுக்கு சொல்லுப் புத்தி ஏறாது.


2000ம் ஆண்டுகளுக்கு முன்பே மது அருந்துவதின் தீமை பற்றி நமது வள்ளுவப் பெருந்தகை தனது 'கள்ளுண்ணாமை' அதிகாரத்தில் மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்.

மரியாதை இராது
உட்கப் படாஅர்; ஒளி இழப்பர்; எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

குறள் விளக்கம்: போதைப்பொருள் மீது எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார்; வாழும் காலத்து, மரியாதையும் இழந்து போவார்கள்.

நாணம் விலகிவிடும்
நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும், கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு

குறள் விளக்கம்: போதைப் பொருளைப் பயன்படுத்துதல் என்னும் பெருங் குற்றத்தைச் செய்வார்க்கு, நாணம் என்னும் நல்ல பெண் முதுகு காட்டிப் போய் விடுவாள்.

பண்பில்லை என்றால் எவ்வளவு அறிவிருந்தும் பயனில்லை!!!.


விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார்.  அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை! ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி. ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.
பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி. இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான்.
''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான். விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்.
 திருமூலர் தனது திருமந்திரத்தில் மனித உடலிலும், உடலுக்கு அப்பாலும் உள்ளது ஆன்மா ஒன்றே என்று கூறுகிறார். இதனை “கூடு விட்டுக் கூடு பாயக் கூடியது” என்றும் கூறுகிறார். அதாவது, ஒரு பிறவியில் நற்பெயர் எடுத்தவன் தனது உடலால் மட்டுமே இறக்கிறான். ஆனால் அவனது ஆன்மாவானது மற்றொருவரின் உடலில் ஏறி இந்த உலகிற்கு நல்லவற்றை செய்து கொண்டே தான் இருக்கிறது.


பாலை’ வைத்து ஆன்மாவை இவ்வாறு விளக்குகிறார் சொல்வேந்தர் சுகிசிவம் அவர்கள். பாலுக்குள் நெய் மறைந்திருக்கிறது. ஆனால் அது நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. பாலை நாம் எதுவும் செய்யாமல் அப்படியே வைத்து விட்டால் அது மறுநாளே கெட்டுப் போய்விடும். சரி, இந்தப் பாலை அப்படியே வைக்காமல் அதைக் காய்ச்சி உறை ஊற்றி வைத்துவிட்டால் மறுநாள் அது கெட்டுப் போகாமல் தயிராக வாழ்ந்து கொண்டிருக்கும்.தயிரைக் கடைந்து மோரும் வெண்ணையுமாக பிரித்துவிட்டால், அதே பால் அடுத்த நாளும் உருவகங்கள் மாறி வாழ்ந்து கொண்டிருப்பதாகிறது. வெண்ணெய் ஒரு வாரம் வரை கெடாது. அதன பின்பு கெட்டுப் போய் விடும். அந்த அழிவிலிருந்து அதைப் பாதுகாக்க வேண்டுமானால் அதை நெய்யாக்கிவிட வேண்டும். நெய்யின் சிறப்பியல்பு என்னவென்றால் ‘உலகம் அழியும் வரை’
அதுவும் அழியாது.

            ஒரே நாளில் கெட்டுப் போகக் கூடியதான பாலுக்குள்ளேதான் யுக முடிவு வரை கெடாமலிருப்பதான நெய் இருக்கிறது. அதை அப்படியே விட்டுவிட்டால் பாலோடு சேர்ந்து அதுவும் கெட்டுப் போகிறது. ஆனால், அதை தனித்துப் பிரிந்துவிட்டால் நிரந்தரத்தன்மையைப் பெற்று விடுகிறது.

        இவ்வாறு, அழியக் கூடியதான தேகத்துக்குள் அழியாததாகிய ஆன்மா இருக்கிறது. அந்த ஆன்மாவே ‘தான்’ என்று அதனை உணர்ந்து, தேகத்தோடு சம்பந்தப்படுத்தாமல் எவன் வாழ்கிறானோ, அவன் அழிவிலிருந்து அழிவற்றதுக்குப் போய் விட்டான் என்று பொருள். மற்றவர்களெல்லாம் தேகத்தையே தாங்கள் என்று கருதிக் கொண்டிருப்பதால் தேகம் அழியும் போது தாங்களும் அழிவதாக உணருகிறார்கள். ஆனால், ஆன்மாவை உணர்ந்தவர்களே தனக்கு மரணமே இல்லை என்பதைத் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆன்மாவை தங்களது எழுத்துக்களின் மூலம் இன்றும் மக்களின் மனதில் உலாவ விட்டு சென்றுள்ள மாமேதைகளில் சிலர்:
• ‘அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்’ அப்போது சாவுமங்கே அழிந்து போகும் என்று கூறிய பாட்டுக்கொரு பாரதி .
• ‘நேருவா மறைந்தார், இல்லை. நேர்மைக்குச் சாவே இல்லை’.
‘ரோஜா மலரே ஏன் மலர்ந்தாய் எங்கள் ராஜா இல்லை மார்பினில் சூட’.
‘சாவே உனக்கு ஒரு நாள் சாவு வந்து சேராத’ என்று நேருவின் இறங்கல்பாவில் கண்ணதாசன் பாடிய பாடல் வரிகள் நேருவின் நேர்மையை இன்றும் பறைசாற்றுகின்றன.
• ‘போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் துற்றுவார் துற்றட்டும் தொடர்ந்து செல்வேன். ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன்; அஞ்சேன்’ என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்கின்ற துணிவு கவிஞர் கண்ணதாசனுக்கு மட்டுமே இருந்தது.
• இந்த ஆன்மா வீரத்தை இறுதியாக ஒரு பாடலில் தெரிவிக்கிறார்.
“நான் நிரந்தரமானவான் அழிவதில்லை
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை”.


பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.
அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."
அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்த பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போல தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போக தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்த தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்த கால கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?
அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.
அடுத்த படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதை கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம். மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.
எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள். செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகி திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.

 
விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !
வெல்ல நினைப்பவன் விலகுவதில்லை !