கதம்பம்

பார்த்ததும், கேட்டதும், படித்ததும்,

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள். (உங்கள் காலை)

2. அமரும்போது வளையாதீர்கள். (அலுவலகத்தில் தூக்கம் வந்தால்கூட)

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள் (மேலதிகாரி மு‎ன்னால் அல்ல)

4. சுருண்டு படுக்காதீர்கள்। (முக்கியமாய் மனைவி எழும்பும்போது)

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள். (மாமியார் மேல் அல்ல)

6. தினம் இருபத்து மூ‎ன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.(மனைவி பி‎ன்னால் வருவதாக நினைத்து)

7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.( பயப்பட வேண்டாம், உங்கள் இடத்தை யாரும் பிடித்துவிட மாட்டார்கள்)

8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள். (பி‎ன்னால் கேர்ள் ப்ரெ‎ண்ட் இருந்தால்கூட)

9. பளுவா‎ன பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள். (குறிப்பாக ஓவர் பாசத்தில் காதலியை)

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வா‎ன் நோக்கி நீட்டுங்கள். (மனைவி மு‎ன் சரண்டர் வதுபோல்)

ந‎ன்றி: குமுதம் வாரஇதழ்

0 comments:

Post a Comment